அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தின் முதன்மையானதும் வடக்கு மாகாணத்தின் முதலாவதும் பெரியதுமான உள்ளகவிளையாட்டரங்கு திறந்து வைக்கப்பட்டது.-Photos



மன்னார் மாவட்டத்தின் முதன்மையானதும் வடக்கு மாகாணத்தின் முதலாவதும் பெரியதுமான உள்ளகவிளையாட்டரங்கு இன்று 03-10-2015 காலை மாண்புபிகு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் பொற்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் பொதுவிளையாட்டரங்கு வளாகத்தினுள் சுமார் 40 மில்லியன் ரூபா செலவில் உள்ளகவிளையாட்டரங்கு கரப்பந்து-பூப்பந்து- மேசைப்பந்து போன்ற விளையாட்டுக்கள் விளையாடவும் பயிற்சி பெறவும் ஏதுவானமுறையில் அமைக்கப்பட்டுள்ளதானது மன்னார் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு தமது இலக்கினை அடைவதற்கான முதற்கட்ட வெற்றியாகும்.
இவ்நிகழ்விற்கு மாண்புபிகு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் கல்வி விளையாட்டு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் குருகுலராஐh அவர்களும் மீன்பிடி போக்குவரத்து கௌரவ அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வடக்கு மாகாண சபை ஊறுப்பினர்களான அ.சிராய்வா அவர்களும் மருத்துவர் சத்தியசீலன் அவர்களுடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.தேசப்பிரிய அவர்களுடனும் மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர்கள் நகரசபைச்செயலாளர்கள் விளையாட்டு உயர்அதிகாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கல்விப்பணிப்பாளர்கள் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

ஆறு வருடங்களின் பின் பலரின் கடும் முயற்சியினால் இன்று எமக்கு கிடைத்திருக்கும் இவ் உள்ளகவிளையாட்டரங்கினை மன்னார் மக்கள் மட்டுமன்றி விளையாட்டு வீரர்களுடன் ஏனை எமது மாவட்ட விளையாட்டு வீரர்களும் பயிற்சி பெறஉதவவேண்டும் அப்போதுதான் விளையாட்டு ரீதியில் 9வது இடத்தில் இருக்கும் எமது மாவட்டம் முதலாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பாக இது போன்ற அம்சங்களை எமது வீரர்களும் மாணவர்களும் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதே பிரமுகர்களின் உரையின் சாரம்சமாக உள்ளதும் உண்மையானதுமானதும் தேவையானது ஒன்றாகவே உள்ளது....






























மன்னார் மாவட்டத்தின் முதன்மையானதும் வடக்கு மாகாணத்தின் முதலாவதும் பெரியதுமான உள்ளகவிளையாட்டரங்கு திறந்து வைக்கப்பட்டது.-Photos Reviewed by Author on October 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.