தெ.ஆபிரிக்காவிடம் வீழ்ந்தது இந்தியா...
இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், டிவிலியர்ஸ் மற்றும் டுமினியின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது தென்னாபிரிக்கா.
இந்தியாவின் இமாச்சல பிரதேச தர்மசாலாவில் இந்தியா –- தென்னாபிரிக்க அணிகள் மோதிய முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் இந்தியாவைத் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய ரோஹித் ஷர்மா 66 பந்துகளில் 106 ஓட்டங்களை விளாசி அசத்தினார். தவான் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். விராட் கோஹ்லி 43 ஓட்டங்களை விளாசினார். அணித் தலைவர் டோனி ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களைப் பெற்றார்.
இறுதியில் இந்தியா 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 199 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிகொண்டது.
தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக அம்லா மற்றும் அதிரடி வீரர் டிவிலியர்ஸ் களமிறங்கினர்.
வந்த வேகத்திலேயே இருவரும் அதிரடியில் இறங்கினார். இதனால் தென்னாபிரிக்க அணி 5 ஓவர்கள் முடிவில் 60 ஓட்டங்களைப் பெற்றது. இந்நேரத்தில் அம்லா 36 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார்.
அதன்பிறகு டுபிளஸிஸ் களமிறங்கினார். அவரும் வந்தவேகத்திலேயே 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பிறகு டுமினி களமிறங்கினார்.
முறுமுனையில் அதிரடியைத் தொடர்ந்துகொண்டிருந்த டிவிலியர்ஸ் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க டுமினியுடன் ஜோடி சேர்ந்தார் பெஹார்தின். இருவரும் அபாரமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.
இறுதியில் 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 200 ஓட்டங்களைப் பெற்று, இந்தியாவை சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது தென்னாபிரிக்கா.
டுமினி 68 ஓட்டங்களுடனும், பெஹார்தின் 32 ஓட்டங்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். போட்டியின் நாயகனாக டுமினி தெரிவுசெய்யப்பட்டார்.
தெ.ஆபிரிக்காவிடம் வீழ்ந்தது இந்தியா...
Reviewed by Author
on
October 03, 2015
Rating:
Reviewed by Author
on
October 03, 2015
Rating:


No comments:
Post a Comment