அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் அரசாங்கம்! அடைக்கலநாதன் எம்.பி சாடல்...


தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமை தம்மையும் தம்மை சார்ந்துள்ள மக்களையும் ஏமாற்றும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
லங்காசிறி செய்தி சேவைக்கு இன்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

தமிழ் கைதிகளை விடுதலை செய்வதாக கூறிய அரசாங்கம், அவர்களை மீண்டும் சிறையில் அடைத்தது அரசாங்கத்தின் ஏழனமான செயல் என அவர் குறிப்பிட்டார்.

கைதிகள் விடயத்தில் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட வகையில் கருத்து தெரிவிப்பதானது வேதனைக்குறிய விடயமாகும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளில் நான்கு மலேசிய பிரஜைகள் உள்ளடங்குவதாக குறிப்பிட்ட அவர், சர்வதேசமும் இந்த விடயத்தில் பொறுப்பு கூற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் போலியான வாக்குறுதிகளை வழங்கி வரும் இலங்கை அரசாங்கம் எவ்வாறு இனப்பிரச்சினையை தீர்வு வழங்க முடியும் என்ற கேள்வி எழுவதாக அவர் கூறினார்.

எனவே விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்று கூடி அரசாங்கத்துக்கு வெளியிருந்து வழங்கும் ஆதரவை விலக்கி கொள்வதா இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்கவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு அரசாங்கத்தின் கட்டளைக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் அதைவிடுத்து இவ்வாறு தான்தோன்றிதனமாக செயற்படுவதனை தாம் வண்மையாக கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் மௌனம் காத்து வருவது அவரின் மீதான மதிப்பு, மரியாதையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் மெத்தன போக்குடன் இருப்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உடனடி முடிவுக்கு வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் அரசாங்கம்! அடைக்கலநாதன் எம்.பி சாடல்... Reviewed by Author on November 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.