அமெரிக்க செய்தி தீவிரவாத தாக்குதலை 3 முறை எதிர்கொண்டு தப்பிய அமெரிக்கர்: அதிசயிக்கத் தக்க சம்பவம்!
உலகை அதிர வைத்த மூன்று தீவிரவாத தாக்குதல்கலில் இருந்து சிறு காயங்களுடன் அமெரிக்கர் ஒருவர் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மோர்மோன் மிஷனரியை சேர்ந்தவர் 19 வயதான Mason wells, இவர் நேற்று நடைபெற்ற பிரஸ்சல்ஸ் வெடிகுண்டு தாக்குதலின்போது காயமடைந்த அமெரிக்கர்களில் ஒருவர் ஆவார்.
இதற்கு முன்னர் நடந்த பாரிஸ் தாக்குதலின் போதும் இவர் அங்கிருந்ததாகவும், அந்த தாக்குதலின்போதும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற பாஸ்டன் மாரத்தான் போட்டியின்போது நடந்த வெடிகுண்டு தாக்குதலிலும் இவர் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஸ்டன் தாக்குதலின் போது இவரது தாயார் அந்த மரதன் போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் என்பதால், அவரை வரவேற்கும் பொருட்டு Mason wells தமது குடும்ப உறுப்பினர்களுடன் அங்கிருந்துள்ளார்.
பாரிஸ் தாக்குதலின்போதும் Mason wells தீவிரவாத தாக்குதலில் சிக்கி மூன்றாம் கட்ட காயங்களுடன் தப்பியதாக கூறப்படுகிறது.
பிரஸ்சல்ஸ் தாக்குதல் நடந்தபோது இவருடன் வேறு இரண்டு மதபோதகர்களும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இது மூன்றாவது முறையாக தங்களின் சபை உறுப்பினர்கள் தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் சிக்கி உயிர் மீண்டு வந்துள்ளதாக குறிப்பிடும் சாட் வெல்ஸ்,
நாம் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உயிர் வாழ்ந்து வருவதாகவும் ஆனால் உலகில் அனைவரும் அன்பு பாராட்டும் நிலையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க செய்தி தீவிரவாத தாக்குதலை 3 முறை எதிர்கொண்டு தப்பிய அமெரிக்கர்: அதிசயிக்கத் தக்க சம்பவம்!
Reviewed by Author
on
March 24, 2016
Rating:

No comments:
Post a Comment