மன்னார் இத்திக்கண்டல் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் அறநெறி பாடசாலை அமைக்க பிரதேசச் செயலாளர் அனுமதி மறுப்பு-படம்,கடிதம் இணைப்பு
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இத்திக்கண்டல் கிராமத்தில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் அறநெறி பாடசாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும்,குறித்த காணியில் உரிமையாளரின் அனுமதியின்றி குறித்த காணியினுள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எம்.சிறிஸ்கந்தகுமார் தெரிவித்துள்ளார்.
குறித்த காணி பிரச்சினை குறித்து மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.குறித்த கடிதத்திலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
-மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலப்பெருமாள் கட்டு கிராம அலுவலகர் பிரிவுக்குற்பட்ட இத்திக்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் சுலியான்னம்மா என்பவருக்கு எஸ்.டி.டி.ஒ.55 ஆம் இலக்க அனுமதிப்பத்திரம் மூலம் கடந்த 23-7-1974 ஆம் ஆண்டு மேட்டு நிலக்காணி வழங்கப்பட்டுள்ளது.
-குறித்த காணியின் விஸ்தீரணம் 1 ஏக்கர்,1 றூட்,1 பேர்ச் கொண்டதாகும்.
குறித்த காணி தொடர்பான வெளிக்கள அறிக்கையின் பிரகாரம் காணியின் நான்கு பக்கமும் எல்லையும்,அனுமதிப்பத்திர நான்கு பக்க எல்லையும் மாற்றமில்லாமல் சரியாக காணப்படுகின்றது.
எவே குறித்த காணியின் அனுமதிப்பத்திர உரிமையாளரின் அனுமதியின்றி குறித்த காணியினை எவ்வித பொது தேவைகளுக்கும் பயண்படுத்த முடியாது என்பதனை தங்களின் கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.
என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எம்.சிறிஸ்கந்தகுமார் அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-தனிநபர் ஒருவருக்கு சொந்தமான குறித்த காணியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வரும் அறநெறி பாடசாலை குறித்து குறித்த காணியின் உரிமையாளர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையிலே குறித்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் இத்திக்கண்டல் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் அறநெறி பாடசாலை அமைக்க பிரதேசச் செயலாளர் அனுமதி மறுப்பு-படம்,கடிதம் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
March 23, 2016
Rating:

No comments:
Post a Comment