வகுப்பறை கற்பித்தலை அபிவிருத்தி செய்ய புதிய கரும்பலைகை கண்டுபிடிப்பு
வகுப்பறைகளில் இலகு முறைகளில் மாணவர்களுக்கு கல்வியை புகட்டுவற்கும் இலகு முறையில் கல்வி கற்பி;ப்பதற்கும் புதிய கரும்பலகை ஒன்றினை மலேசிய கல்வியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.
முற்றிலும் புதிய கணணி தொழில்நுட்பத்துடன் இந்த கரும்பலகையை செயற்படுகின்றது. இதன் முலம் ஒலி, ஒளி வரைதல், கணக்கிடுகள், உருவங்கள், விஞ்ஞானம், புவியியல், ஆங்கிலம் கணனி தொழில் நுட்ப கல்வி, பௌதிகவியல், இரசாயனவியல், விலங்கியல் போன்ற இன்னோரன்ன வி;;டயங்கள் கற்கவும் கற்பிக்கவும் முடியும்.
இந்த கரும்பலகையை இலங்கைளில் அறிமுகம் செய்வது தொடர்பில் மலேசியாவில் இருந்து வருகை தந்த பேராசிரியர்கள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணயகார, நிபுணத்துவ ஆலோசகர் கலாநிதி க.சிவனேசராஜா ஆகியோருக்கு விளக்கம் அளித்தனர். எதிர்காலத்தில் இந்த செயற்திட்டம் இலங்கையில் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்க நடிவடிக்கை மேற்க்கொள்ளபடும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வகுப்பறை கற்பித்தலை அபிவிருத்தி செய்ய புதிய கரும்பலைகை கண்டுபிடிப்பு
Reviewed by NEWMANNAR
on
March 23, 2016
Rating:

No comments:
Post a Comment