ஜேர்மன் விலங்கியல் பூங்காவில் ‘இரட்டை தலை விஷப்பாம்பு’: ஆச்சர்யத்தில் ஆழ்ந்த பார்வையாளர்கள்....
ஜேர்மனி நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் முதன் முறையாக திறந்து வைக்கப்பட்டுள்ள ‘இரட்டை தலை விஷப்பாம்பு’ ஒன்றை பார்வையாளர்கள் வியப்புடன் கண்டு களித்து வருகின்றனர்.
ஜேர்மனியின் புகழ்பெற்ற Rostock விலங்கியல் பூங்கா கடந்த 1899ம் ஆண்டில் நிறுவப்பட்டது.
சுமார் 56 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் 320 வகைகளை சேர்ந்த 4,500 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு யூன் மாதம் அனைவரும் ஆச்சர்யம் அடையும் வகையில் பாம்பு ஒன்றிற்கு ‘இரட்டை தலைகள்’ உள்ள அதிசய பாம்பு ஒன்று பிறந்துள்ளது.
இது தற்போது 65 கிலோ எடையுடன், 65 செ.மீ நீளத்துடன் வளர்ந்துள்ளது. இப்பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் நேற்று முதன் முறையாக இந்த அதிசய பாம்பை பார்வைக்கு வைத்துள்ளனர்.
இந்த இரட்டை தலை பாம்பை குறித்து பூங்கா அதிகாரியான Antje Zimmermann என்பவர் பேசியபோது, ‘இந்த அதிசய பாம்பானது தானாகவே உணவை தேடிக்கொள்ளும்.
இரண்டு தலைகளின் உதவியுடன் உணவை பிடித்தாலும், ஒரு வாய் வழியாகவே உண்ணும். இதற்கு இரண்டு தலைகள் மட்டுமின்றி, இரண்டு மூச்சு மற்றும் உணவு குழாய்களும் உள்ளன.
இயற்கையாக மனிதர்களில் அரிதாக ஏற்படும் சில மரபியல் மாற்றங்கள் காரணமாக இந்த விஷப்பாம்பு இரட்டை தலையுடன் பிறந்துள்ளது.
பிறந்து 10 மாதங்கள் ஆகியிருந்த நிலையிலும், இது இந்த நிமிடம் வரை ஆரோக்கியமாகவே வாழ்ந்து வருகிறது.
நேற்று இந்த இரட்டை தலை பாம்பை முதன் முறையாக பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்பட்டவுடன், பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கண்டு களித்ததாக Antje Zimmermann தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் விலங்கியல் பூங்காவில் ‘இரட்டை தலை விஷப்பாம்பு’: ஆச்சர்யத்தில் ஆழ்ந்த பார்வையாளர்கள்....
Reviewed by Author
on
March 24, 2016
Rating:

No comments:
Post a Comment