அண்மைய செய்திகள்

recent
-

ஈச்சிலம்பற்றில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு...


திருகோணமலை வெருகல் ஈச்சிலம்பற்று சண்பக மகா வித்தியாலயத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு கனடா சிடாஸ் அமைப்பினரால் துவிச்சக்கர வண்டிகள் நேற்று  வழங்கி வைக்கப்பட்டது.
இப்பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 05 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி
வழங்கும் நிகழ்வு வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாடசாலை உதவி அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் எஸ்.தயாபரன், கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர்களான க.சுரேஸ், கே.கிருபராசா, வணபிதா ஏ.நவரெட்ணம் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

வெருகல் பிரதேசத்தில் மிகவும் தூர இடத்திலிருந்து பாடசாலைக்கு எதுவித போக்குவரத்து வசதிகளுமின்றி நடந்து வரும் மாணவர்களின் நலன் கருதி எழுபதாயிரம் ரூபாய் பெறுமதியான 05 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் உதவியை வழங்கி வைத்த கனடா சிடாஸ் அமைப்பினரு தங்களுடை நன்றிகளைத் தெரிவிப்பதாக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர்.




ஈச்சிலம்பற்றில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு... Reviewed by Author on March 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.