பிரதேச மட்டத்திலான செயற்குழு அமைத்தலும் ஒருங்கிணைப்பு கூட்டமும் .2016 - பிரதேச செயலகம் - மடு-Photos
சமுதாய சீர்திருத்த காரியாலயத்தினூடாக மடு பிரதேச செயலாளர் பிரிவில் சமுதாய சீர்திருத்த செயற்பாடுகளை மேற்கொள்வது பற்றிய ஒருங்கிணைப்பு கூட்டமும் சமுதாய சீர்திருத்த நடவடிக்கைகளிற்கான குழு அமைத்தல் செயற்பாடும் கடந்த 23.03.2016ம் திகதி புதன்கிழமை உதவித்திட்டமிடல் பணிப்பாளர் -எல்.ஜே றொகான் குரூஸ் தலைமையில் மடு பிரதேச செயலக காரியாலயத்தில் நடைபெற்றது.
மேற்படி கூட்டம் மற்றும் குழு அமைத்தல் செயற்பாடு பற்றிய நடவடிக்கைகளிற்காக வடமாகான சிரேஸ்டசமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் எம் ஏ எம் அனஸ் - சமுதாய சீர்திருத்த காரியாலயம், நீதவான்நீதிமன்றம், மன்னாரிலிருந்து வருகைதந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமுதாய சீர்திருத்த செயற்திட்டங்களை செவ்வனே நிறைவேற்றுவதற்கு துறைசார் உத்தியோகத்தர்களின்பங்பளிப்புக்களும் தேவைப்படுவதால் கீழ்வரும் சம்பந்தப்பட்ட துறைசார் உத்தியோகத்தர்களையும் கூட்டத்திற்கு
அழைக்கப்பட்டிருந்ததுடன் அவ் அலுவலர்களின் விருப்புடன் சமுதாய சீர்திருத்த செயற்பாட்டுக்கான குழுவிலும்அங்கத்தவர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைவர் – தி;ரு எப் சி சத்தியசோதி – பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், மடு
உப தலைவர் – திரு எல் ஜே றொகான் குரூஸ் - உதவித்திட்டமிடல் பணிப்பாளர் – பிரதேச செயலகம் -
மடு
செயலாளர் – திரு ரி விஜயச்சந்திரா – சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தி;யோகத்தர் –
பிரதேச செயலகம், மடு
மேலும் நிர்வாக சபை அங்கத்தவர்களாக
1) நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் – திரு எஸ்ரவீந்திரன்,
2) பொலிஸ் உத்தியோகத்தர் – ஜ றியாஸ்,
3) திரு எஸ் செபதாசன் - சமூக சேவைகள்உத்தியோகத்தர்,
4) திரு ஏ இ எப் டயஸ் - சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்,
5) திரு யூட்நிமால்சிறி – சமுர்த்தி; முகாமையாளர்,
6) திரு எஸ் தனுஜன் - கலாச்சார உத்தியோகத்தர்,
7)இளைஞர்கள் சேவை உத்தியோகத்தர்,
8) கல்வி அதிகாரி,
9) பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்,
10) திரு எப் ஜே கிலறன்ஸ் - பொதுசன தொடர்பு உத்தியோகத்தர்,
11) திரு எஸ்ஜெனகன் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்,
12) திரு பி மதியழகன் -விதாதா வளநிலைய இணைப்பாளர்,
13) திரு எம் ஏ எம் தஸ்மீம் - விளையாட்டு உத்தியோகத்தர்.
சமுதாய சீர்திருத்தத்திற்கான 1வது செயற்திட்ட குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய செயற்குழுவின்உபதலைவரும், உதவித்திட்ட பணிப்பாளருமான திரு எல் ஜே றொகான் குரூஸ் அவர்கள் மடு பிரதேச செயலாளர்பிரிவில் பல பிரதேசங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுவதுடன் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்ற சம்பவங்களும் இதற்கு காரணம் பெற்றோர் மது மற்றும் போதைப்பொருட் பாவனைகளிற்கு
அடிமையாகியமையாலும் கல்வியில் போதிய அறிவின்மையுமே ஆகும்
அவ்வாறான செயற்பாடுகளையே இளையசந்ததியினரும் பின்பற்றி வருகின்றார்கள் ;எனவும் இதனால் பல சீரளிவுகள், இளவயது திருமணம்,
சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற பல பிரச்சினைகள் பெருகியவாறு உள்ளது எனவும் இதற்குஇத்த்pணைக்களத்தின் செயற்பாடுகள் இன்றியமையாததும், வரவேற்கத்தக்கதும் எனவும் இதற்கு சம்பந்தப்பட்டஉத்தியோகத்தர்களின் பூரண ஒத்துழைப்புக்கள் தேவை எனவும் ஆரம்ப உரையில்க் சுட்டிக்காட்டியிருந்தார்
தொடர்ந்து திணைக்களம் பற்றிய செயற்திட்டங்கள், மற்றும் குற்றங்களைக் குறைப்பதற்கான யுக்திகள்என்பன பற்றியும் சமுதாய சீர்திருத்த செய்ற்திட்டத்திற்கான குழு அமைத்தல் செயற்திட்டத்திற்காக விசேடமாக வருகைதந்திருந்த வடமாகான சிரேஸ்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் – திரு எம் ஏ எம் அனஸ்(துP) - சமுதாய சீர்திருத்தக் காரியாலயம்,
நீதவான் நீதிமன்றம், மன்னார் அவர்கள் கீழ்வருமாறுகுறிப்பிட்டிருந்தார்.
சமுதாயத்தில் ஆங்காங்கே நடைபெற்று வரும் சிறு குற்றங்களே பெரிய சமூக பின்விளைவாகவும்,மாபெரும் குற்ற செயல்காளாகவும் அரங்கேறி வருகின்றது எனவும், இவற்றை ஆரம்பத்திலேயே கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கைளையும், உரிய அறிவுரைகளையும், உரிய வளிகாட்டல்களையும், தவறான செயற்திட்டங்களினால் எதிர்காலத்தில் அவரவர்களிற்கும், அவரவரது குடும்பங்களிற்கும் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விழிப்புனர்வுகளை ஏற்படுத்தி சிறு குற்றங்களிலிருந்து ஒவ்வொருவரும் விடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவோமானால் சமூகத்திலுள்ள ஒவ்வொருவரையும் நல்லதொருபிரஜைகளாக மாற்றி அமைக்க முடியும் எனவும், அரங்கேறிவரும் குற்றச் செயல்களிலிருந்து விடுபட்டுக்கொள்ள அல்லது குறைத்துக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுக் கொண்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் சமுதாய சீர்திருத்த செயற்பாடு என்பது இலகுவான காரியம் அல்ல எனவும் தவறாளர்கள் ஒவ்வொருவரையும் சீர்திருத்திக் கொள்வது இலகுவான காரியம் அல்ல எனவும் இச் செயற்பாடுகளை சமுதாய சீர்திருத்தத்திற்கான உத்தியோகத்தர்களினால் மட்டும் சாதித்து விட முடியாது எனவும் இச் செயற்பாடுகளிற்கு குறிப்பிட்ட பிரதேச மற்றும் கிராம மட்டங்களில் கடமையாற்றுகின்ற ஒவ்வொரு திணைக்களம் சார் உத்தியோகத்தர்களும் வலிந்துதவி ஒத்துழைப்புக்களை வழங்கும் பட்சத்திலேயே படிப்படியாக வெற்றி காண முடியும் எனவும் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாறான செயற்பாடுகளிற்காகவே சமுதாய சீர்திருத்த திணைக்களமானது பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சமுதாய சீர்திருத்த அபி;விருத்தி உத்தியோகத்தர்களின் கடமைகளில் ஒன்றாக இச் செயற்திட்டத்திற்கான குழுவினை நெறியாளுதல், அக்குழுவினூடாக தவறாளர்களிற்கான புனர்வாழ்வு செயற்திட்டங்களை மேற்கொள்ளுதல், சிறு குற்றங்களை கண்காணித்தலும் அறிக்கையிடலும் போன்ற கடமைகளினையும் பணித்துள்ளது எனவும் தெரிவித்துக் கொண்டார்.
ஏம் ஏ எம் அனஸ்
சிரேஸ்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்
சமுதாய சீர்திருத்தக் காரியாலயம்
நீதவான் நீதிமன்றம்
மன்னார்
பிரதேச மட்டத்திலான செயற்குழு அமைத்தலும் ஒருங்கிணைப்பு கூட்டமும் .2016 - பிரதேச செயலகம் - மடு-Photos
Reviewed by NEWMANNAR
on
March 24, 2016
Rating:
No comments:
Post a Comment