இலங்கையில் கூகுள் வரைப்படத்தில் (Google Maps) பாதை படம் (Street view)-Photo
இலங்கை பாதை படம்(Street view) இப்போது கூகுள் வரைப்படத்தில்(Google Maps) கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது.
இலங்கை மட்டுமல்ல உலகம் முழுவதும் வசிக்கும் மக்கள் அனைவரும் இப்போது தங்கள் கையடக்கத்தொலைபேசி அல்லது கணினியில் இருந்து 360-டிகிரியில் அழகான படங்களில் இலங்கையை பார்வையிட முடியும்.
கூகுள் இன்று இலங்கையில் வெளியிட்டுள்ள இந்த வசதி உலகில் 76 நாடுகளிலே பாவனைக்கு உள்ளது.
கிடைக்கும் பாதை படத்தை(Street view) மக்கள் ஆராய்ந்து தாங்கள் செல்ல விரும்பும்இடங்களுக்கு செல்ல முடியும் என்று கூகுள் வரைப்படம் (Google Maps) தெரிவிக்கிறது.
கூகுள் வரைபடத்தில் ஒரு இடத்தை பெரிதாக்குவதன் மூலம் வீதி நிலை படங்களை அணுக முடியும், அல்லது வரைபடத்தின் கீழ் வலது மூலையிலிருக்கும் மஞ்சள் "pegman" Icon அழுத்துவதன் மூலம் இந்த சேவையை பெற்று கொள்ளலாம்.
Map adress
இலங்கையில் கூகுள் வரைப்படத்தில் (Google Maps) பாதை படம் (Street view)-Photo
Reviewed by NEWMANNAR
on
March 23, 2016
Rating:

No comments:
Post a Comment