மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் கருங்கல் பொருத்தும் வேலைகள் இன்று ஆரம்பித்து வைப்பு.Photos
மன்னார் அருள் மிகு திருக்கேதீச்சரத்து திருத்தலத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் இடம் பெற்று வரும் ஆலயத்தின் உட்பிரகார மண்டபத்திருத்தப்பணியின் கருங்கல் பொருத்தும் வேலைகள் இன்று புதன் கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,யாழ் இந்திய துணைத்தூதுவராலயத்தின் துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் ஆகியோர் இணைந்து அடிக்கல்லினை நாட்டி ஆலயத்தின் உட்பிரகார மண்டபத்திருத்தப்பணியின் கருங்கல் பொருத்தும் வேலைகளினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
இதன் போது இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.ஞானசோதி , திருக்கேதிச்சரத்து ஆலய சபையினர்,ஆலய அறங்காவலர் சபையின் தலைவர் மா.தவயோகராஜா, திருக்கேதிச்சர ஆலயத்திருப்பணிச் சபையின் தலைவர் கந்தையா நீலகண்டன், இணைச் செயலாளர்களான எஸ்.இராகவன்,ஏ.திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னார் அருள் மிகு திருக்கேதீச்சரத்து திருத்தல ஆலயத்தின் உட்பிரகார மண்டபத்திருத்தப்பணியின் கருங்கல் பொருத்தும் வேலைகளுக்காக இந்திய அரசு வழங்கிய 336 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ் குறித்த வேளைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் கருங்கல் பொருத்தும் வேலைகள் இன்று ஆரம்பித்து வைப்பு.Photos
Reviewed by NEWMANNAR
on
March 23, 2016
Rating:
No comments:
Post a Comment