சிக்சர் ’மன்னன்’ யுவராஜ்.. ரன் ’மிஷின்’ கோஹ்லி: ருசிகர தகவல்கள்
டி20 உலகக்கிண்ண தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
பெரிய யுத்தமாக பார்க்கப்படும் இவ்விரு அணிகளின் மோதல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை பற்றி பார்க்கலாம்.
அதிக சிக்சர்கள்:-
இவ்விரு அணிகள் மோதிய டி20 போட்டிகளில் இந்திய வீரர் யுவராஜ் சிங் (8 சிக்சர்கள்) தான் அதிக சிக்சர்கள் விளாசியுள்ளார். இவருக்கு அடுத்து பாகிஸ்தானின் மிஸ்பா, ஹபீஸ் தலா 5 சிக்சருடன் உள்ளனர்.
அதேபோல் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் விளாசியவர்கள் பட்டியலிலும் யுவராஜ் சிங் (7 சிக்சர்கள்) முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்து மிஸ்பா 4 சிக்சர்கள் அடித்துள்ளார்.
அதிக விக்கெட்டுகள்:-
இவ்விரு அணிகள் மோதிய டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் உமர் குல் (11 விக்கெட்) முதலிடத்திலும், இந்திய வீரர் இர்பான் பதான் (6 விக்கெட்) அடுத்த இடத்திலும் உள்ளார்.
அதேபோல் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் பாகிஸ்தானின் அமீர் (4 விக்கெட்டுகள்), ஹர்த்திக் பாண்ட்யா (3 விக்கெட்) உள்ளனர்.
அதிக ஓட்டங்கள்:-
இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் இந்திய வீரர் கோஹ்லி (5 போட்டி, 199 ஓட்டங்கள்) தான் அதிக ஓட்டங்கள் எடுத்தவராக உள்ளார். பாகிஸ்தான் தரப்பில் ஹபீஸ் (6 போட்டி, 151 ஓட்டங்கள்) முதலிடத்தில் உள்ளார்.
மேலும், ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களில் கோஹ்லி (78*) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் தரப்பில் ஹபீஸ் (61) முதலிடத்தில் உள்ளார்.
அணியின் ஓட்டங்கள்:-
இவ்விரு அணிகள் மோதிய டி20 ஆட்டத்தில் இந்தியா அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்கு 192 ஓட்டங்கள் எடுத்தது. குறைந்த பட்சமாக 5 விக்கெட்டுக்கு 88 ஓட்டங்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை 7 விக்கெட்டுக்கு 181 ஓட்டங்கள் அதிகபட்சமாகவும், குறைந்த பட்சமாக 83 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.
மிரட்டுமா மழை?
இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் மழை பெய்ததால் ஆட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. தற்போது மழை விட்டுள்ளது.
மேலும், போட்டி நடைபெறும் நேரத்தில் மழை இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.
சிக்சர் ’மன்னன்’ யுவராஜ்.. ரன் ’மிஷின்’ கோஹ்லி: ருசிகர தகவல்கள்
Reviewed by Author
on
March 19, 2016
Rating:

No comments:
Post a Comment