டி20 உலகக்கிண்ணம்: பரிசுத் தொகை எத்தனை கோடி தெரியுமா?
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் உள்ள 8 முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
தற்போது 10 அணிகள் ‘சூப்பர்-10’ சுற்றில் பங்கேற்று வருகிறது. இதில் இருந்து அரையிறுதிக்கு 4 அணிகள் முன்னேறும்.
இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் ஏப்ரல் 3ம் திகதி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
இதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.24 கோடி பரிசுத் தொகையாக கிடைக்கும். இது கடந்த தொடரை விட ரூ.5.70 கோடி அதிகம் ஆகும்.
அதேபோல் இறுதிப் போட்டியில் தோற்கும் அணிக்கு ரூ.10.3 கோடியும், அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளுக்கு ரூ.5.14 கோடியும் பரிசுத் தொகையாக கிடைக்கும்.
டி20 உலகக்கிண்ணம்: பரிசுத் தொகை எத்தனை கோடி தெரியுமா?
Reviewed by Author
on
March 19, 2016
Rating:

No comments:
Post a Comment