அம்பாறை, மட்டு. மாவட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவு - சாதனையாளர்கள் விபரம்!
அம்பாறை மாவட்டம்
அம்பாறை கல்முனை கல்வி வலயத்தின் பற்றிமா கல்லூரி, பாலிகா கல்லூரி, சாஹிரா கல்லூரி, உவெஸ்லி கல்லூரி உள்ளிட்ட 10 பாடசாலைகளின் 35 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
கல்முனை பற்றிமா கல்லூரில் 08 மாணவர்களும் கல்முனை மகுமூத் மகளிர் கல்லூரியில் 08மாணவிகளும் கல்முனை சாஹிறா தேசிய கல்லூரியில் 06மாணவர்களும், கல்முனை உவெஸ்லி உயர்தரக்கல்லூரியில் 05மாணவர்களும் நிந்தவூர் அல்அஸ்ரக் தேசிய கல்லூரியில் 2 மாணவர்களும் காரைதீவு இ.கி.மி.பெண்கள் பாடசாலையில் இருவரும் 9 பாடங்களிலும் ஏ சித்திபெற்றுச்சாதனை படைத்துள்ளனர்.
மேலும் காரைதீவு விபுலானந்த மத்தியகல்லூரி; சண்முகா மகா வித்தியாலயம் அல்மிஸ்பா வித்தியாலயம் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் தலா ஒரு மாணவர் வீதம் 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.
அதேபோல் 8ஏ 1பி சித்திகள் அதிகம் காணப்படுதாகவும் ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்களில் பலர் குறைந்தபெறுபேறு எடுத்திருப்பதனை அவதானிக்கக்கூடியதாயுள்ளதெனவும் அதற்கான ஆய்வை மேற்கொண்டு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 53 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதில் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 29 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளதுடன் ஏறாவுர் கல்விக் கோட்டத்தில் 16 மாணவர்களும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் 8 மாணவர்களும் 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 29 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயத்தில் 13 மாணவிகள் இதில் ஆக கூடுதலாக 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன், காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் 4 மாணவிகளும், காத்தான்குடி அல் ஹிறா வித்தியாலயத்தில் 4 மாணவர்களும், காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் 3 மாணவிகளும், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையில் 3 மாணவர்களும், காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தில் ஒரு மாணவியும், காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் ஒரு மாணவியும் 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
அதே போன்று ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் ஏறாவுர் அலிகார் தேசிய பாசடரைலையில் 4 மாணவர்களும், ஏறாவூர் அறபா மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும் ஏறாவூர் அல் முனீறா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும், அஸ்ஹர் பெண்கள் தேசிய பாடசாலையில் 3 மாணவர்களும், றகுமாணியா மகா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும், மாக்கான் மாக்கார் வித்தியாயத்தில் ஒரு மாணவரும் 9 பாடங்களிம் ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் 5 மாணவர்களும், ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் ஒரு மாணவரும். மற்றும் மிறாவோடை அல்ஹிதாய வித்தியாலயத்தில் ஒரு மாணவரும், வாழைச்சேனை ஆயிஸா மகளிர் வித்தியாலயத்தில் ஒரு மாணவியும் 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
அத்துடன் மட்டு. பெரியகல்லாறு மத்திய கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் நால்வர் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். வ.மதுப்பிரசாலினி, எஸ்.ஜினுஜான,வ.கிர்சனா, வீ.தசாயினி ஆகியோரே இந்த மாணவர்களாகும்.
அம்பாறை, மட்டு. மாவட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவு - சாதனையாளர்கள் விபரம்!
Reviewed by NEWMANNAR
on
March 21, 2016
Rating:

No comments:
Post a Comment