மனிதக் கழிவுகளை எரிக்கும் கட்டிடம் வேண்டாம் !!
மனிதக் கழிவுகளை எரிக்கும் கட்டட நிர்மாணத்தை நிறுத்தக் கோரி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மட்டக் களப்பு பாலமீன் மடு, திராய்மடு பொதுஅமைப்புகளின் ஒன்றியம் பாரியா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று நடத்தியுள்ளனர் .
இதன் போது மீனவர்களுக்கு வழங்கப் பட்டிருந்த காணியை உல்லாச விடுதி அமைப்பதற்கும் மனிதக் கழிவுகளை எரிக்கும் கட்டட நிர்மாணத்தை நிறுத்தக் கோரியுமே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல பொதுமக்கள் தங்கள் குறைபாடுகளை எடுத்து கூறியதுடன் அரசியல் பிரமுகர்களிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ .யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா அவர்களும் பல பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
மனிதக் கழிவுகளை எரிக்கும் கட்டிடம் வேண்டாம் !!
Reviewed by NEWMANNAR
on
March 22, 2016
Rating:

No comments:
Post a Comment