ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர்களின் 32ஆவது மாநாட்டில், வட மாகாண முதலமைச்சர் பங்கேற்கவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர்களின் 32ஆவது மாநாட்டில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை.
இந்த மாநாடு, ஹிக்கடுவையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதேவேளை, நாளை 23ஆம் திகதி புதன்கிழமையன்று இடம்பெறும், வாராந்த அமைச்சரவை மாநாட்டுக்கு வருகைதந்து, மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளைப் பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைக்குமாறு அம்மாநாட்டில் பங்கேற்றிருந்த ஏனைய எட்டு மாகாணங்களின் முதலமைச்சர்களிடம், ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர்களின் 32ஆவது மாநாட்டில், வட மாகாண முதலமைச்சர் பங்கேற்கவில்லை.
Reviewed by NEWMANNAR
on
March 22, 2016
Rating:

No comments:
Post a Comment