மாணவ மாணவிகளே தங்களுக்கோர் தாழ்மையான வேண்டுகோள் தயவு செய்து தப்பான முடிவுகளை…
தற்போது வெளியாகியுள்ள கல்விப்பொது சாதாரணதரப்பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளது மாணவ மாணவிகளே தங்களுக்கோர் தாழ்மையான வேண்டு கோள் தயவு செய்து தப்பான முடிவுகளை எடுக்காதீர்கள் பெற்றோர்களே நண்பர்களே உறவினர்களே பொதுநிலையினரே தேவையில்லாத கதைகளை பலிச்சொல்லை மனம் நோகும்படியான கேலி கிண்டல்களை தவிருங்கள் அன்பான வார்த்தையை பகிருங்கள்….
குறிப்பாகபெற்றோர்களும் கூடப்பிறந்தவர்களும் உங்கள் பிள்ளைகயை சகோதரசகோதரிகளை வஞ்சிக்காதீர்கள் ஏளனம் செய்யாதீர்கள் மற்றவர்களோடு ஒப்பிட்டு பேசாதீர்கள் பல கஸ்ரங்களுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்கவைத்தும் பிள்ளைகள் நல்ல பெறுபேறு எடுக்கவில்லை என்றால் கவலை தான் உங்கள் கஸ்ரங்கள் துன்பங்கள் வேதனைகள் பிள்ளைகளின் மீது காட்டும் போது பிள்ளைகள் தங்களின் வலியை உணர்ந்து கொள்ளமாட்டார்கள் மாறாக தப்பான வழிக்கு தங்களை உட்படத்தி தவறான முறையில் தங்களை இழந்து விடுவார்கள்.....
வாழ்க்கை என்பதே பல பரீட்சைகளை தாண்ட வேண்டிய கடல்தான் கப்பல் செல்லும் போது அலைகள் பேரலைகள் அடிக்கத்தான் செய்யும் நாம் தான் தகுந்தாற்போல் துடுப்பினை பயன்படத்தி திசையறிந்து மதியினை பயன்படுத்தி இலக்கை அடையவேண்டும்.
சந்தர்ப்பங்கள் பலவுள்ளது நாம்அதை சரியாகப்பயன்படத்தி முன்னேற வேண்டும் அதற்கு பக்கதுணையாக பெற்றோர்கள் சகோதரர்கள் நண்பர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் சாதித்தவர்கள் எல்லாம் பல பரீட்சையில் தோல்வியடைந்தவர்கள்தான் மனவலிமையும் தைரியமும் விடாமுயற்சியும்தான் அவர்களை இந்த உலகத்தில் நிலைநிறுத்தியுள்ளது.
உணருங்கள் பெற்றோர்களே உணர்த்துங்கள் மாணவர்களுக்கு பாடசாலை அதிபர்களே ஆசிரியர்களே துணையாயிருங்கள் பரீட்சையில் சித்தியடையாத மாணவமாணவிகளுக்கு வருங்காலம் உள்ளது வாழ்கையில் nஐயிப்பதற்கு….
உயிரோடு இருந்தால் தான் இந்த உலகை வெற்றிகொள்வாய் உலகமும் உன்னை நினைவில் கொள்ளும் வரலாறு உனது பெயரை எழுதும்.
சிந்தி சிறிது நேரம்
சந்தித்துவிடு சாதனைப்படிகளை….
வை.கஜேந்திரன்

Reviewed by Author
on
March 19, 2016
Rating:

No comments:
Post a Comment