அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகருக்கும், வடமாகாண முஸ்ஸீம் பிரஜைகள் குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பு.(படம்)
அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினருக்கும்,வடமாகாண முஸ்ஸீம் பிரஜைகள் குழுவினருக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அடம்பன் பள்ளிவாசல் பிட்டியில் அமைந்துள்ள முஸ்ஸீம் பிரஜைகள் குழு அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.
மன்னாரிற்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயத்தை மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் அடம்பன் பள்ளிவாசல் பிட்டியில் அமைந்துள்ள முஸ்ஸீம் பிரஜைகள் குழு அலுவலகத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே குறித்த விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
வடமாகாண முஸ்ஸீம் பிரஜைகள் குழுவின் தலைவர் அஸ்ரப் முபாரக் ரசாபீ மௌலவி உற்பட பிரஜைகள் குழுவின் பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது வடமாகாண முஸ்ஸீம்களின் மீள் குடியேற்றம்,சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையினை கட்டியெழுப்புதல்,இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுகின்ற போது வடமாகாண முஸ்ஸீம்களுக்கு உரிய இடம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து ஆரயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்
19-03-2016
மன்னாரிற்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயத்தை மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் அடம்பன் பள்ளிவாசல் பிட்டியில் அமைந்துள்ள முஸ்ஸீம் பிரஜைகள் குழு அலுவலகத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே குறித்த விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
வடமாகாண முஸ்ஸீம் பிரஜைகள் குழுவின் தலைவர் அஸ்ரப் முபாரக் ரசாபீ மௌலவி உற்பட பிரஜைகள் குழுவின் பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது வடமாகாண முஸ்ஸீம்களின் மீள் குடியேற்றம்,சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையினை கட்டியெழுப்புதல்,இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுகின்ற போது வடமாகாண முஸ்ஸீம்களுக்கு உரிய இடம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து ஆரயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்
19-03-2016
அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகருக்கும், வடமாகாண முஸ்ஸீம் பிரஜைகள் குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பு.(படம்)
Reviewed by NEWMANNAR
on
March 20, 2016
Rating:

No comments:
Post a Comment