"கண்டு பிடிக்கப்பட்ட வெடி பொருட்களும் வெளிவராத உண்மைகளும்"
சாவ கச்சேரியில் வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்ட யூலியஸ் பிரபாகரனிடம் முக்கிய தொடர்புடையவராகவும் புனர் வாழ்வு அளிக்கப்படாதவருமாக இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.எனினும் அவர் முன்னுக்குப் பின் முறனான கருத்துக்களை தெரிவிப்பதுடன் தன்னிடமிருந்து தகவலை பெறாத வண்ணம் சாமர்த்தியமாக பயங்கரவாத தடுப்பு பொலிசாரை குழப்பி வருவதாகவும்,பிடிபடும் போது எதிரியிடம் எவ்வாறு நடத்து கொள்ள வேண்டும் என்று நன்கு பயிற்றப்பட்டவராக இருப்பதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.இது இவ்வாறு இருக்கையில் மகிந்த சார்ப்பு பத்திரிக்கைகள் இவ்விடயத்தினை வேறு கோணத்தில் விமர்சித்து சிங்கள மக்களை குழப்புகின்றனர்.
குறிப்பாக "தினமின" என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்"பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யும் யூலியசினை (பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்படும் ஒருவர் எவ்வித நீதிமன்ற நடமுறைகளும் பின்பற்றாது D.O வின் பிரகாரம் மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க முடியும்)

புலம் பெயர் தமிழ் சமூகம் தற்சமயம் சிறையிலுள்ள மொரிஸ் என்ற நபருக்கு புலிகளை மீள உருவாக்க பணம் வழங்கியதாகவும் மொரிஸ் யூலியஸ் மூலமாக வெடி பொருட்களை யாழ்ப் பாணத்தில் பதுக்குவதாகவும் அவ் ஆயுதங்களின் ஒரு தொகுதி திருகோணமலை துறை முகத்தினுாடாக கடத்தப்பட இருப்பதாகவும் இதில் டி−56ரக துப்பாக்கிகள் உட்பட பல நாசகரமான வெடிபொருட்கள் அடங்குவதாகவும்,புலம்பெயர் தமிழர்கள் தென்னிலங்கை பாதாள குழுவோடு தொடர்பு வைத்து இலங்கையில் ஆயுதம் மற்றும் போதை பொருட்கள் கடத்துவதாகவும்"செய்தி வெளியிட்டுள்ளது.
(இலங்கையில் போதை பொருள் ஈரான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் மூலமே கடத்தப்படுகின்றது என்ற அரசாங்க அறிக்கையினை இவர்கள் அறிவில்லை போலும்)
இவை அனைத்தும் பொய் என்று மக்களுக்கும் தெரியும்.ஆனால் தமது கற்பனைகளை மகிந்த குழுவினர் "தினமின" என்ற பத்திரிக்கை மமூலம் வெளிபடுத்தியுள்ளமையே வருத்தமளிக்கிறது.காரணம் ஊடகமானது நடுநிலையாக செயற்பட வேண்டும்.
மகிந்த குழுவினர் சாவகச்சேரி சம்பவத்தை வைத்து மறைமுகமாக சில விடயங்களை காய் நகர்த்த பார்க்கின்றனர்.அனைவருக்கும் தெரியும் சமீப காலமாக தமிழ் கைதிகள் விடுதலை,வட மாகாணத்திலிருந்து இராணுவம் வெளியேற்றப்படல்,பயங்கரவாத தடைச் சட்டம் நீக்குதல்,வில்பத்து குடியேற்றம்,விடுதலை புலிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தேசிய,சர்வதேச மட்டங்களில் அதிகமாக பேசப் படுகிறது.இதனை தடுக்க வேண்டுமாயின் மீண்டும் புலிகளை தோற்றுவப்பதற்கான சூழலை அல்லது அதற்கான கதையாடலை ஏற்படுத்த வேண்டும்.இதற்கு இராணுவ ஆட்சியிலை நிலை நிறுத்த வேண்டும் என்பதே இவர்களுடைய ஒரே சிந்தனையாகும்.
அண்மையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்து கொண்ட யாழ்ப்பாண கூட்டத்தில் யாழ் இராணுவ கட்டளையிடும் அதிகாரி அமைச்சர் மீது தமது கடுமையான கோபத்தினை காட்டியிருந்தார்.அவர் கொழும்பிற்கு மாற்றப்பட்டு கண்காணிப்பட்டு கொண்டிருந்தாலும் இராணுவ மட்டத்திலும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வெறுப்பேயுள்ளது.இதனையே மகிந்தர்"இராணும் மற்றும் புலனாய்வாளர்களை சிறையிலடைத்தும் புலிகளை விடுதலை செய்கின்றனர்"என்று அடிக்கடி கூறுகின்றார்.அவர்கள் எதற்காக சிறையிலுள்ளனர் என்று மகிந்தருக்கு தெரியாதா?
நன்றாக யோசித்து பார்த்தால் மகிந்த குழுவினர் எதை கொண்டு எதற்கெல்லாம் முடித்துப் போடுகின்றனர் என்பது புரியும்.அண்மை காலமாக இரண்டு விடயங்கள் அவர்களுக்கு பெரும் தலையிடியாக உள்ளது.ஒன்று அரசியல் கைதி விடுதலை.மற்றது வில்பத்து அமைச்சரின் வளர்ச்சி.இதனை தடுப்பதற்காகவே சாவ கச்சேரி சம்பவத்துடன் முடிச்சு போடுகின்றனர்.தற்சமயம் சிறையிலுள்ள மொரிஸ் என்ற முன்னால் புலி உறுப்பினர்தான் சரத் பொன்சேக்கா மீதான தற்கொலை குண்டுக்கான குற்றவாளி.அவரை விடுதலை செய்யும்படி அண்மையில் சரத் பொன்சேக்காவே ஜனாதிபதியிடம் தெரிவித்தமையினால் ஜனாதிபதியும் அவரை விடுதலை செய்வதற்கான ஆயத்தங்களை செய்துள்ள இந்த நேரத்தில் மொரிஸ்"புலம் பெயர் சமூகத்தினுாடாக யூலியசுடன் தொடர்பை பேணினார்" என்பது நம்ப கூடியதாக இருக்குதா?மொரிஸ் சிறையிலிருந்து கொண்டு வெடி பொருட்களை கடத்த முடியுமா?அந்தளவிற்கு பயங்கரவாத தடுப்பு பொலிசில் பலவீனங்களுள்ளனவா?
குறித்த அமைச்சர் யூலியசை விடுதலை செய்ய உதவுவதாகவும் வில்பத்திலுள்ள ஆயுதங்களை தடுத்ததாகவும் கூறியிருப்பது படு முட்டாள்தனமாக கருத்தாகும்.
இவற்றை விட இரு அரசியல் ஜோக்கர்கள் தெரிவித்த கருத்துக்கள் தான் இன்னும் சுவாரசியமானது.விமல் வீரவம்ச கூறும் போது"சாவ கச்சேரி வெடி பொருள் கண்டு பிடித்த உடனே அங்கிருந்த ஒரு பொலிஸ் அதிகாரி தன்னிடம் தொடர்பு கொண்டு இவற்றை மக்களிடம் தெரிவியுங்கள்.யாழ்பாணத்தில் பயங்கரவாதிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர்.பயங்கரமான ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.அரசாங்கம் இவற்றை மறைத்து குறைந்தளவான தகவல்களையே வழங்கும்"என்று தன்னிடம் கூறியுள்ளதாக கூறியிருப்பது பொலிசாரையே ஆத்திரமடைய வைத்துள்ளது.
விமலை முந்திக் கொண்டு கருத்து தெரிவித்த அடுத்த ஜோக்கரான ஜீ.எல்.பீரிஸ் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டு ஐந்து மணித்தியாலத்தில் நடந்த கூட்டத்தில்"கண்டு பிடிக்கப்பட்ட வெடி பொருட்கள் வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படஇருந்தன"என்று கூறியதன் விளைவாக கடந்த சனிக்கிழமை குற்றப் புலனாய்வாளர்களால் மூன்று மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டார்.அவர் வழங்கிய வாக்கு மூலம் நகைப்புக்குரியதாகின்றது"குறித்த கூட்டத்திற்கு தினேஷ் குணவர்தனவே கலந்து கொள்வதாக இருந்தார்.அவரால் பங்குபற்ற முடியாததால் தன்னை கலந்து கொள்ளுமாறும், இவ்வாறான விடயங்களை கூறும்படியும்,
அவை என்னுடைய கருத்துக்களில்லை.தினேஷ் குணவர்தனதான் அவ்வாறு கூற சொன்னார்"என்று கூறியுள்ளார்.இவர் மூத்த அரசியல் வாதியும் அனுபவமுள்ள சட்டத் தரணியும் பல சட்ட நுால்களை எழுதிய,சட்டப் பேராசிரியருமாவார்.இவர் இப்படி பட்ட சிந்து முடிகிற வேலையை செய்தது ஜீரணிக்க முடியாதுள்ளது.
அதைவிட நகைசுவை யாதெனில் விசாரணை முடிந்து செய்தியாளர்களிடம் பேசும் போது"முறைப்படி தன்னை குற்றப் புலனாய்வு பிரிவு அழைக்கவில்லை.அதற்கான எழுத்தாணைகளை தம்மிடம் காண்பிக்கவில்லை.கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபரின் பெயரில் அழைத்து விசாரிப்பது சட்ட நடைமுறையில்லை.அவர்களுக்கு கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்"என்று கூறியிருப்பது அவரது வழமையான வீ(ண்)ர வசனமாகவே உள்ளது. எனவே வாயைக் கொடுத்து மாட்டிய தினேஷ் குணவர்தன மற்றும் விமல் வீரவன்ச ஆகிய இருவரையும் குற்ற புலனாய்வு பிரவினர் விசாரிக்க உள்ளமை அவர்களுடைய பலவீனமான அரசியலையே காட்டுகின்றது.
எழுத்தாக்கம் suthanLaw
"கண்டு பிடிக்கப்பட்ட வெடி பொருட்களும் வெளிவராத உண்மைகளும்"
Reviewed by NEWMANNAR
on
April 06, 2016
Rating:

No comments:
Post a Comment