மன்னாரில் முதல் முறையாக விழிப்புலனற்றோர் வழங்கும் இன்னிசை விருந்து.
யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி மன்னாரில் முதல் முறையாக விழிப்புலனற்றோர் வழங்கும் இன்னிசை விருந்து நிகழ்வு இடம் பெற இருக்கின்றது.
எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை(10-04-2016) மாலை 2 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம் பெறவுள்ளது.
ஆசிரியை செல்வி செபமாலை பெனடிக்ரா தலைமையில் இடம் பெறவுள்ள குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,சிறப்பு விருந்தினராக மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல்,கௌரவ விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ்.செபஸ்ரியான்,மன்னார் அம்பிகா ஜீவலரி உரிமையாளர் மு.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-
(6-04-2016)
எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை(10-04-2016) மாலை 2 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம் பெறவுள்ளது.
ஆசிரியை செல்வி செபமாலை பெனடிக்ரா தலைமையில் இடம் பெறவுள்ள குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,சிறப்பு விருந்தினராக மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல்,கௌரவ விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ்.செபஸ்ரியான்,மன்னார் அம்பிகா ஜீவலரி உரிமையாளர் மு.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-
(6-04-2016)
மன்னாரில் முதல் முறையாக விழிப்புலனற்றோர் வழங்கும் இன்னிசை விருந்து.
Reviewed by NEWMANNAR
on
April 06, 2016
Rating:

No comments:
Post a Comment