வடமாகாண ஆளுனர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு விஜயம்- அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு---படங்கள் இணைப்பு
வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே விஜயம் ஒன்றை மேற்கொண்டு மன்னாரிற்கு இன்று செவ்வாய்க்கிழமை(5) காலை வருகை தந்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்த ஆளுனரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம.வை.எஸ்.தேசப்பிரிய வரவேற்றார்.அதனைத்தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,பிரதேசச் செயலாளர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள்,அரச திணைக்களங்களின் தலைவர்கள் என சகலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்கள் குறித்தும்,ஏற்பட்டுள்ள பாதீப்புக்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
-மன்னார் நிருபர்-
வடமாகாண ஆளுனர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு விஜயம்- அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு---படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
April 05, 2016
Rating:

No comments:
Post a Comment