லண்டன் நகருக்கு வெடிகுண்டு மிரட்டல்: எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகள்...
ஐ.எஸ் குழுவினர் வெளியிட்டுள்ள புது வீடியோவில் லண்டன் உள்ளிட்ட 3 நகரங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ள புது வீடியோ பதிவில் லண்டன், பெர்லின் மற்றும் ரோம் நகரங்களில் அடுத்த தாக்குதல் இருக்கும் என எச்சரித்துள்ளனர்.
பாரிஸ் மற்றும் பிரசெல்ஸ் தாக்குதல் குறித்து பேசும் அந்த வீடியோவில், ஐ.எஸ் குழுவினருக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு இதுவே தீர்வு எனவும் எச்சரிக்கின்றனர்.
பாரிஸ், பிரசெல்ஸ் நாகரங்களை அடுத்து தாக்குதலை தொடுக்கும் நகரம் குறித்து அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தெரிவு செய்யப்பட்டுள்ள 3 நகரங்களில் ஒன்றில் முதலில் தாக்குதல் தொடுக்கப்படும் எனவும் அந்த ஐ.எஸ்.ஆதரவாளர் தெரிவிக்கின்றார்.
பிரசெல்ஸ் தாக்குதலுக்கு முழு பொறுப்பும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள ஐ.எஸ், எதிர்வரும் காலங்களில் ஐரோப்பாவிற்கு இருள் சூழ்ந்த நாட்களை பரிசளிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் ஐ.எஸ் ஆதரவாளர்கள் என கூறிக்கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த புது வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள நிபுணர்கள்,
இது ஐ.எஸ்.அமைப்பின் தோல்வியை சுட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற பதிவுகளால் அவர்கள் ஆள் சேர்க்க முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
லண்டன் நகருக்கு வெடிகுண்டு மிரட்டல்: எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகள்...
Reviewed by Author
on
April 05, 2016
Rating:

No comments:
Post a Comment