அண்மைய செய்திகள்

recent
-

'பனாமா பேப்பர்ஸ்' கசிவு : உலகமே வியப்பில் .....


உலகம் முழுவதும் வாழும் அரசியல் தலைவர்கள் , திரைப்பட  நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்கள்  தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் இன்று கசித்துள்ளதால் உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது.

'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரால் அறியப்படும் இத்தாள்,விக்கிலீக்ஸ் போன்ற ஒரு தகவல் கசிவு விவகாரமாகும் .

மொஸாக் ஃபொன்செகா என்ற சட்ட நிறுவனமானது பனாமா நாட்டில் இயங்கி வந்துள்ள நிலையில் அந்நிறுவனத்திலிருந்தே இத்தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல தசாப்தங்களாக இந்நிறுவனமே இம் மோசடி நடவடிக்கைகளை மிகவும் துல்லியமாகவும் ராஜ தந்திரத்துடனும்  ரகசியமாக தமது வாடிக்கையாளர்களுக்காக முன்னெடுத்துள்ளது. இந்நிறுவனம் தமது வாடிக்கையாளர்கள்  வரி ஏய்ப்பு செய்யவும்  சொத்துக்களை பதுக்கவும் உதவியுள்ளது.

இந்த தகவல் கசிவின் பின்னணியில் பல சர்வதேச ஊடகங்களின்  புலனாய்வு ஊடகவியலாளர்கள் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalism) என்ற வொஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் நேற்று  'பனாமா பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் பல தகவல்களை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது.

 இதில் , 11.5 மில்லியன் தகவல் தரவுகளைத் திரட்டியுள்ளதும் அது  சுமார் 2.6 டெரா பயிட்களாகும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் புலனாய்வில் 140 அரசியல் புள்ளிகளின் வரி ஏய்ப்பு, பண பதுக்கல் அம்பலமாக்கியிருக்கிறதுடன் ,இந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதல் பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸி வரை பலர் இதில் இடம்பெற்றிருக்கின்றனர்.

புடினுக்கு நெருக்கமானவர்களால் ஒரு ரஷ்ய வங்கி, பில்லியன் டாலர்கள் அளவுக்கு பணத்தை முறைகேடு செய்ததில் ஈடுபட்டிருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும்,  இந்த ஆவணங்கள்  மூலம் சுட்டிக்காட்டுகின்றன.

வெளியாகிய இந்த தகவலில் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக், லிபியாவின் முன்னாள் தலைவர் கடாஃபி, சிரிய அதிபர் பஷர் அல் அஸாத் ஆகியோரது குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களோடு தொடர்புடைய ரகசிய வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்த ஆவணங்களில் இருக்கின்றமையும் குறிப்படத்தக்கது.

இதில் அடங்கியுள்ள  140 அரசியல் பிரபலங்களில் 12 பேர் தற்போதும், முன்னாள் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில்  இந்தியர்கள் பெயரும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

பிரிட்டனில் நான்கு நிறுவனங்களை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் குடும்பத்தினர் நடத்தி வருவதாகவும், இந்த நிறுவனங்களின் மூலம் ஏராளமான சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளதாகவும் இவ் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளன.

ஆனால்,மொசாக் ஃபொன்செக நிறுவனம் , தாங்கள் 40 ஆண்டுகளாக இயங்கிவருவதாகவும் ஒருபோதும் இத்தகைய மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறது.

இத் தகவல் கசிவு குறித்து முனிச் நகரில் இருந்து செயல்படும் சுடட்சே ஜெய்துங் (Sueddeutsche Zeitung) என்ற நாளிதழின் நிருபர் பாஸ்டியன் ஓபர்மேயர் கூறும்போது, "அடையாளத்தை வெளியிடாத விரும்பாத  உள்வட்டாரம் ஒன்று எங்களுக்கு இத்தகவலை வழங்கியது. அவர்கள் இதற்காக பண  ஏதும் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் , எவ்விதத்திலும் தங்கள் அடையாளம்  வெளியாகிவிடக்கூடாது என்பதை மட்டும் தம்மிடம் வலியுறுத்தினர்" என்றார்.

பனாமா பேப்பர்ஸ் தகவல் கசிவு உலக மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், பனாமா நாட்டு அதிபர் ஜூவான் கார்லஸ் வெரெலா , "பனாமா நிதித் துறையில் எவ்வித முறைகேடுக்கும் இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். தற்போது கசிந்துள்ள ஆவணங்கள் தொடர்பாக முழுமையான நீதி விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் மே மாத ஆரம்பத்தில் நிதி மோசடிக்காரர்கள் அனைவரின் விபரங்கள் வெளியிடப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.












'பனாமா பேப்பர்ஸ்' கசிவு : உலகமே வியப்பில் ..... Reviewed by Author on April 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.