சம்பூர்: ஆவணப்பட டிரெய்லர்
இலங்கை பூராகவும் இருந்து பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் பல தடவைகள் இடம்பெயர்ந்துவருகின்றனர்.
மறுசீரமைப்பை பரிந்துரை செய்தும் நீதியற்ற மற்றும் தன்னிச்சையான நடைமுறைகள் தொடர்பில் எதிர்த்து வழக்காடியும் இடம்பெயர்வு மற்றும் மீள்வருகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆவணப்படுத்தி வருகின்றது. வழக்காடலுக்கு ஆதரவளித்தும் காணி விடுவிப்புகள் மற்றும் நிலையான தீர்வுகளுக்கு பரிந்துரை செய்தும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் பல வருடங்களாக உன்னிப்பாக பின்பற்றி வந்துள்ள இரு வழக்குகளில் யாழ். மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டம், சம்பூரிலும் உள்ள பிரதேசங்களும் உள்ளடங்குகின்றன. புதிய அரசாங்கத்தின் இழப்பீடுகள் மற்றும் மறுசீரமைப்புக்கான வாக்குறுதிகளுடன் இந்த இரு விடயங்களிலும் சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. பல வருடங்களாக
இடம்பெயர்வுக்குப் பின்னர் உரிமையாளர்களினால் சில காணிகளுக்குத் திரும்ப முடிந்துள்ளது. இடம்பெயர்வு தொடர்பில் தொடரும் போராட்டங்கள், சொந்த இடங்களுக்கு திரும்புவோருக்கு காத்திருக்கும் சவால்கள் மற்றும் புதிய எதிர்காலம் பற்றிய நம்பிக்கை ஆகிய விடயங்களை உள்வாங்கும் ‘சம்பூர்’ | ‘SAMPUR’ எனும் தலைப்பிலான ஆவணப்படமொன்றை தமது மிக அண்மைய முன்னெடுப்பாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உருவாக்கியுள்ளது.
விருதுபெற்ற ஆவணப்பட இயக்குநரான கண்ணன் அருணாசலம் சம்பூர் ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த ஆவணப்படம் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதுடன், www.tjsrilanka.org என்ற இணையத்தளத்தில் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும்.

SAMPUR: Documentary trailer from Centre for Policy Alternatives on Vimeo.
சம்பூர்: ஆவணப்பட டிரெய்லர்
Reviewed by NEWMANNAR
on
April 05, 2016
Rating:

No comments:
Post a Comment