மடு வலய ஆசிரியர்களுக்கான ஆசிரியர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வானது.....படங்கள் இணைப்பு
ஆசிரியர் மாநாடு – 2016
மடு வலயக்கல்வி அலுவலகம்.
“நமக்குள் நாமே மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஏனையோரிடத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்ற கல்விக்கோட்பாட்டிற்கிணங்க வடமாகாணக்கல்வித்திணைக்களத்தின் ஆதரவிலும் மடு வலயக்கல்வி அலுவலகத்தின் முன்னெடுப்பிலும் இன்றும் நாளையும் இரண்டு நாள் நிகழ்வாக (29.07.2016- 30.07.2016) நடைபெறும்.
மடு வலய ஆசிரியர்களுக்கான ஆசிரியர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வானது மன் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று காலை 08.30 மணியளவில் மடு வலயக்கல்விப்பணிப்பாளர் உயர் திரு தி. ஜோன் குயின்ரஸ் தலைமையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அதி. வண. ஆயரும் மன்னார் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகருமான கலாநிதி பேரருட் திரு கிங்சிலி சுவாம்பிள்ளை அவர்களும்....
உயர் திரு இராசா இரவீந்திரன் செயலாளர் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வடமாகாணம் அவர்களும் கலந்து கொண்டனர்.
ஆரம்ப வைபவமாக ஆசிரிய இன்னிய அணி வரவேற்பும் அதனைத்தொடர்ந்து தேசிய மாகாண வலய கொடியேற்றும் நிகழ்வும் மங்கள விள்க்கேற்றுதல் வரவேற்புரையுடன் கூடிய தலைமையுரையானது வலயக்கல்விப்பணிப்பாளர் திரு தி. ஜோன் குயின்ரஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டதுடன் கலைநிகழ்வுகள் கண்காட்சியும் இடம்பெற்றது இம்மாநாட்டில் மடு வலயத்திட்குட்பட்ட 52 பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் உட்பட வலய அலுவலர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இன்றைய மாநாட்டு பேருரை “அபிவிருத்தி அடைந்து வரும் பிரதேசங்களில் கல்வி மேம்பாட்டிற்கான தந்திரோபாயங்கள்” என்ற தலைப்பில் பேராசிரியர் பொ.பாலசுந்தரம் பிள்ளை (முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர்) அவர்களும் “கல்வியின் புதிய செல்நெறிகள் கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டவை” என்ற தலைப்பில் கலாநிதி திருமதி ஜெ.இராசநாயகம் (கல்வியற்துறை- யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும் பேருரை ஆற்றினார்கள். பின்னர் மாலை 5.00 மணியளவில் முதல் நாள் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.
இரண்டாம் நாள் நிகழ்வு நாளை மன் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் காலை 8-30 மாலை நிகழ்வு கருங்கண்டல் பாடசாலையிலும் நடைபெறவுள்ளது.
மடு வலய ஆசிரியர்களுக்கான ஆசிரியர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வானது.....படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
July 29, 2016
Rating:
No comments:
Post a Comment