அண்மைய செய்திகள்

recent
-

கலைஞனின் அகம் கணனியில் முகம்.....இளம் வீராங்கனை செ.குணாளினி அவர்களின் அகத்திலிருந்து….

கலைஞனின் அகம் கணனியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக எம்மோடு பேசவருகிறார் சாதிப்பதற்கு பெண் ஆண் என்று பேதமில்லை களத்தில் இறங்கிவிட்டால் யாருடைய வீண்கதையினையும் காதில் விழுத்தக்கூடாது எமது வெற்றி இலக்கை அடைவதே குறிக்கோளா இருக்கவேண்டும்  10விதமான விளையாட்டுடன் மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப்பதக்கங்கள் விருதுகள் பெற்ற இளம் வீராங்கனை செ.குணாளினி அவர்களின் அகத்திலிருந்து….

தங்களைப்பற்றி-
மன்னார் மண்ணிலே அடம்பனிலே வயலும் வயல் சார்ந்த செந்நெல் பொழிகின்றதும் இதமான தென்றல் வீசுகின்ற பசுமையான மதுரைமரங்களும் குளிர்ச்சியான குளங்களும் நாற்சந்தியில் தரிசனம் கொண்ட அந்தோனியார் ஆலயத்தையும் கிறிஸ்த்தவ மக்களையும் கொண்டு விளங்குகின்ற அழகிய கிராமமாம் நெடுங்கண்டல் தான் எனது தந்தை மிக்கேல் செங்கோல் எனது தாய் பிரகாசியம்மா சகோதர சகோதரர்களுடன் நான் வாழும் கிராமம்….

தங்களது பாடசாலைக்காலம் பற்றி-
இனிமையானது எனது ஆரம்பக்கல்வியை மன்.ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலையிலும் தரம் 06-தொடக்கம் உயர்தரம் வரை மன்.அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்று சித்தியடைந்து இளையோருக்கான வலைப்பந்து பயிற்சியாளராகவும் வீராங்கனையாகவும் உள்ளேன்.

உங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் எப்படி உருவானது….
நான் ஆரம்பக்கல்வி கற்கும் போதே 2002 ஆண்டு பாடசாலையில் நடைபெற்ற மெய்வல்லுனர் 11வயது பெண்கள் பிரிவில் 100மீற்றர்-75மீற்றர்-நீளம் பாய்தல் ஆகிய போட்டிகளில் 1ம் இடத்தினைப்பெற்று அந்த ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தெரிவுசெய்யப்பட்டு வெற்றிக்கிண்ணமும் பெற்றேன். இது எனது முதலாவது வெற்றியாகவும் மறக்கமுடியாத நிகழ்வாகவும் விளையாட்டுத்துறையில் ஆர்வத்தினையும் கால்பதிக்கவும் காரணமாய் அமைந்தது எல்லோரினதும் வாழ்த்துக்களாகும்….

மிகவும் கவலையான விடையமாக கருதுவது---
தொடர்ந்து 13வயது பிரிவில் 100மீற்றர்-200மீற்றர்-நீளம் பாய்தல் போட்டிகளில் கலந்து கொண்டு 1ம் இடம்பெற்று சம்பியன் ஆகியதோடு கோட்டம் வலையம் மட்டங்களிலும் கிண்ணங்களைப்பெற்றதோடு மாவட்டமட்டத்தில் நிளம் பாய்தலில் தெரிவாகி முதல் தடவையாக மாகாண மட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் போட்டிக்கு செல்வதற்கான வசதியின்மையால் வாய்ப்பபை தவறவிட்டேன் அத்தோடு 2008-2009 இரண்டு ஆண்டுகள் யுத்த சூழ்நிலையும் எனது விளையாட்டுத்திறமையினை முடக்கிவிட்டது….

மீண்டும் உங்கள் விளையாட்டு….
மீண்டும் எனது விளையாட்டுகளில் 2010 ஈடுபடத்தொடங்கினேன் 2010 ஆம் ஆண்டு 542 Brigede ஆல் நடத்தப்பட்ட Volly Ball Tournament போட்டியில் பாடசாலைக்கும் கழகத்திற்கும் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாடசாலை சார்பாக விளையாடி முதல் இடத்தினை பெற்றதோடு சிறந்த Best Player வீராங்கனையாகவும் தெரிவுசெய்யப்பட்டேன் 2011 ஆண்டும் எனது விளையாட்டு  St.antanis Club இன்று வரை பதக்கங்களையும் பெற்றுக்கொண்டு தானிருக்கிறேன்….

உங்கள் விளையாட்டுகளின் உச்சம் என்று எதனைச்சொல்விர்கள்----
2013ம் ஆண்டு நடைபெற்ற மாகாண மட்ட கால்பந்து போட்டியில் 2ம் இடத்தினைப்பெற்றதோடு தேசியப்போட்டிக்கு தெரிவானேன் வடமாகாணத்திற்கு விளையாடுவதற்காக கிளிநொச்சி மாவட்ட கால்பந்தாட்ட பெண் வீராங்கனைகளுடன் விளையாடுவதற்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து நான் தெரிவு செய்யப்பட்டு அங்கு நடைபெற்ற 3ன்றாவது இடத்திற்கான போட்டியில் தென்மாகாண அணிக்கும் வடமாகாண அணிக்கும் நடைபெற்ற பெனாட்டி முறையிலான 2-1என்று எமது அணி தோற்றாலும் அந்த ஒரு கோலும் நான்தான் அடித்தேன் அந்த நிமிடங்கள் இன்னும் எனக்கு பசுமரத்தாணி போலவே….

உங்களுக்கு தெரிந்த விளையாட்டுக்கள் பற்றி---
காற்பந்து-வலைப்பந்து- பூப்பந்து-கூடைப்பந்து கரப்பந்து மேசைப்பந்து கிறிக்கெற் கபடியுடன் மெய்வல்லுனர் போட்டிகளாக 100-200-4*100-4*400 நீளம் பாய்தல் முப்பாய்ச்ல்  இத்தனை விளையாட்டுக்கள் தெரியும் என்பதைவிட அத்தனை விளையாட்டுக்களிலும் வலயம் மாவட்டம் கோட்டம் மாகாணம் கழகக மட்டத்தில் 1ம்-2ம்-3ம் இடங்களைப்பெற்றுள்ளேன்.

இத்தனை விளையாட்டுக்களிலும் மிகவும் பிடித்த விளையாட்டு என்றால்--
அது காற்பந்துதான் அதிக ஆர்வமும் இலகுவான முறையில் விளையாடுவேன் விருப்பத்தால் தேசிய போட்டியில் வடமாகாணசார்பாக விளையாடி ஒரு கோலும் அடித்துள்ளேன்.

உங்களிடம் வலைப்பந்து விளையாட்டுக்கான அணியொன்றை தயார்படுத்த சொன்னால் எத்தனை மாதத்தில் சிறந்த அணியாக உருவாக்குவீர்கள்---
சிறந்த ஆர்வமுடைய விராங்கனைகளாக இருந்தால் ஓரிரு மாதத்தில் நல்ல சிறந்த அணியை உருவாக்குவேன் என்னால் முடியும் ஏன் என்றால் நான் மன்.அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில் பயிற்சியளித்து வந்தேன் சில வீரர்களின் ஆர்வமின்மையால் நிறுத்தியுள்ளேன் ஆனால் என்னால் முடியும் சந்தர்ப்பம் அமைந்தால் எனது திறமையை நிரூபிப்பேன்…

 
உங்களின் திறமைக்கு கிடைத்த பதக்கங்களும் சான்றிதழ்களும் பற்றி---

Net Ball-கூடைப்பந்து
2010-பாடசாலை மாவட்டமட்டத்தில் 3வது இடம் 19 வயது பிரிவு
2013-கழகம் மாவட்டத்தில்  1வது இடம்
2014-கழகம் மாவட்டத்தில்  1வது இடம்
2015-கழகம் மாவட்டத்தில்  1வது இடம்
2016-கழகம் மாவட்டத்தில்  1வது இடம்
2016-கழகம் மாகாண மட்டத்தில்  3வது இடம்

Foot Ball-காற்பந்து
2011-கழகம் மாவட்டத்தில்  2வது இடம்
2011-Kreeda Shakthi Training Program
2012-மாகாண மட்டம் 2வது இடம்
2013-கழக மட்டம்   2வது இடம்
2013-மாகாண மட்டம் 2வது இடம்

Volly Ball-கைப்பந்து
2010-கழகம் ஐனாதிபதி தங்ககிண்ணம்President Gold Cup-1வது இடம்
2010-542-Brigede சிறந்த வீராங்கனை Best Player-1வது இடம்
2014-மாவட்டம் 2வது இடம்
2016-கழகமட்டம் 1வது இடம்

கபடி-Kabaddi
2012-கழகம்-மாவட்ட மட்டம் 2வது இடம்
2013-கழகம்-மாவட்ட மட்டம் 2வது இடம்
2014-கழகம்-மாவட்ட மட்டம் 1வது இடம்

Table Tennis-மேசைப்பந்து
2013-கழகம்-மாவட்ட மட்டம் 1வது இடம்
2014-கழகம்-மாவட்ட மட்டம் 1வது இடம்

Batminton-பூப்பந்து
2013-கழகம்-மாவட்ட மட்டம் 1வது இடம்
2014-கழகம்-மாவட்ட மட்டம் 1வது இடம்

Cricket-கிறிக்கெற்
2010-பாடசாலை மட்டம் 3வது இடம்
2016-கழகம்-மாவட்ட மட்டம் 1வது இடம்
2016-கழகம்-மாவட்ட மட்டம் 1வது இடம்

Athlatice Meet-மெய்வல்லுனர் போட்டிகள்
2011-4*100M மாகாணம் 3வது   21வயது பிரிவில்
2011-200M கழகம்    2வது இடம்
2011-முப்பாச்சல்-Triple Jump கழகம்-2வது இடம்
2011-100M கழகம் 1வது இடம்
2011-4*100M கழகம் 1வது இடம்
2011-4*100M மாவட்டம் 3வது இடம்

School leval-பாடசாலை மட்டத்தில்

2011-200ஆ வலயமட்டம் 1வது
2011-200ஆ பாடசாலை மட்டம் 1வது இடம்
2011-100ஆ மாவட்ட மட்டம் 2வது இடம்
2011-100ஆ வலய மட்டம் 1வது இடம்
2011-200ஆ வலய மட்டம் 1வது இடம்
2011-100ஆ கோட்ட மட்டம் 1வது இடம்
2011-Long Jump-நீளம்பாய்தல் கோட்ட மட்டம் 1வது இடம்

2012ம் ஆண்டில் ---
Triplep Jump-முப்பாச்சல்- கழகத்திற்காக 2வது இடம்
100மீற்றர் கழகத்திற்காக 1வது இடம்
200மீற்றர் கழகத்திற்காக 1வது இடம்
4*400மீற்றர் மாவட்ட மட்டம் 2வது இடம்
200 மீற்றர்  மாவட்ட மட்டம் 3வது இடம்
4*100மீற்றர் மாகாண மட்டம் 2வது இடம்

2013ம் ஆண்டில் ---
200மீற்றர் கழகத்திற்காக 2வது இடம்
4*400மீற்றர் கழகத்திற்காக 1வது இடம்
Triple Jump-முப்பாச்சல்- கழகத்திற்காக 1வது இடம்
4*100மீற்றர் கழகத்திற்காக 1வது இடம்

ஒரு விளையாட்டு வீரவீராங்கனைக்கு இருக்க வேண்டி தகுதிகள் எவையெனக்கருதுகிறீர்கள்---
அரோக்கியமான உடல் தகுதி
முழுமையான ஈடுபாடு
நேரப்பங்கீடும் தொடரச்சியான பயிற்சி
துன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியும் சேர்ந்த கலவையானால் ஒழுக்கமான சிறந்த விளையாட்டு வீரவீராங்கனையாக இருப்பார்கள் இவைகள் தான் தகுதிகள் எனக்கருதுகின்றேன்.

உங்களுடைய இந்த வளர்ச்சியில் அதிகம் பங்குபற்றிய பயிற்சியாளர்கள் பற்றி---
பாடசாலைக்காலத்தில் எனக்கு பயிற்சியளித்தவர்கள்---
அன்ரன் சேவியர்-உடற்கல்வி ஆசிரியர்
எஸ்-றெக்கஸ் அருள்நேசன்-மன்னார் மாவட்ட வலைப்பந்து பயிற்றுவிப்பாளர்
ஈழநாயகி ஆசிரியை-உடற்கல்வி ஆசிரியை
நோயல் ஆசிரியை –உடற்கல்வி ஆசிரியை

கழகத்திற்காக விளையாடும் போது தற்போது
M.R.M.ஜஸ்மின்-ஊழவஉh
M.R.M.அஷ்கர் விளையாட்டு அலுவலர்
S.அருள்நேசன் பயிற்றுவிப்பாளர்.

உங்களைப்போல உள்ள விளையாட்டு வீரங்கனைகளுக்கு சொல்ல நினைப்பது...
சாதிக்கனும் என முடிவெடுத்தபின்பு அண் பெண் என்று வேறுபாடு இன்றி வெட்கத்தை விட்டு முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் முயற்சியோடு செயற்பட்டு வெற்றி இலக்கை அடைய எவ்வளவு எதிர்ப்புக்கள் தடைகள் வந்தாலும் அதற்கு முகம்கொடுத்து வெற்றி இலக்கை அடையவேண்டும்.

உங்களது இலட்சியக்கனவானது---
எனது இலட்சியக்கனவானது Sri Lanka National Team தேசிய காற்பந்து அணியில் விளையாடனும்  அத்தோடு சிறந்த காற்பந்து நடுவராகவும் வரவேண்டும்  மன்னார் மாவட்டத்திற்கும் எனது கீராமத்திற்கும் பெருமைசேர்ப்பேன் இதற்காக முழுமையாக என்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறேன். அதற்கான பல முயற்சிகள் எடுத்து வருகின்றேன் பொருளாதார வசதியும் சிறந்த பயிற்சியும் அதற்கான களமும் அமையுமானால் என்னால் இந்த இலட்சியக்கனவை அடையமுடியும்.

உங்களைப்போன்று விளையாடக்கூடிய வீராங்கனைகள் பற்றி---

மன்னார் மாவட்டத்தில் பல திறமையான வீராங்கனைகள் இருக்கின்றார்கள் அதிலும் என்னோடு விளையாடியவர்கள் என்றால்
பள்ளிமுனை டிலுக்ஷனா தாழ்வுபாடு ஆன் அந்தோனியார்புரத்தில் சுகிர்தா போன்றவர்கள் காற்பந்தில் சிறப்பாக விளையாடக்கூடியவர்களும் என்னை கவர்ந்த எமது மண்ணின் வீராங்கனைகளும்.

பெண்ணாக இருந்து கொண்டு சாதிக்க துடிக்கும் உங்களுக்கு சமூதாயத்தில் இருந்து தொந்தரவுகள் தடைகள் ஏற்படவில்லையா---
எனக்கு இதுவரை எல்லோருமே ஆதரவாகத்தான் உள்ளார்கள் எனது குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் ஊர்மக்கள் பயிற்சி ஆசிரியர்கள் இவர்களோடு போட்டிகளில் கலந்து கொள்ளச்செல்லும் இடங்களிலும் பாதுகாப்பானமுறையில் தான் இருப்போம். சில சந்தர்ப்பங்களில் ஏனையவயர்கள் சிறு கருத்து முரண்பாடுகள் வந்திருக்கின்றது ஆனால் எனக்கு இதுவரை எந்தப்பிரச்சினையும் இல்லை…பெண்ணாக பல விடையங்களை சாதித்துள்ளார்கள் இலங்கையின் ஒலிம்பிக் பதக்க வீராங்கனை சுகந்திக்கா ஜேசிங்க இலங்கையின் உயர்ந்த சிறந்த வீராங்களை தர்சினி அக்கா போன்றவர்களை எண்ணிப்பாருங்கள் தப்பாக நினைப்பவர்கள் நினைக்கத்தான் செய்வார்கள் அதைக்கண்டு கொள்ளாமல் எமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டியது தான்…

விளையாட்டு வீராங்கனையான உங்களை  இதுவரை யாராவது கௌரவப்படுத்தியள்ளார்களா….????
இதுவரை இல்லை ஆனால் பல முறை பல விளையாட்டுக்களில் கலந்து கொண்டு பதக்கங்களைபெற்றாலும் கண்டு கொள்ளவேயில்லை ஆனால் ஒரு முறை வடமாகாணம் சார்பாக 2013 தேசிய அணியில் விளையாடியபோது பெனால்ட்டி முறையில் 1கோல் அடித்ததற்காக ஒரு சோடி பாதணிகள் வாங்கித்தந்தார்கள் அவ்வளவுதான் அதன் பிறகு பல போட்டிகளுக்கும் அழைத்துச்செல்வார்கள் ஆனால் எந்தவிதமான முறையான பயிற்சியும் இல்லை பயிற்சிக்கான களமும் இல்லை ஊக்கமளிக்கும் செயற்பாடுகள் இல்லை எனக்கு மட்டுமல்ல என்னைப்போன்ற ஏனைய வீரவீராங்கனைகளுக்கும் இதே நிலைதான் இது மாறவேண்டும்….

மன்னார் மக்கள் கலைஞர்கள் எனதனது சேவையினை வழங்கி வரும் நியூ மன்னார் இணையமானது தனது விம்பம் பகுதியில் கலைஞர்கள் பகுதியில் உங்களை நேர்காணல் கண்டுள்ளதைப்பற்றி---
எனக்கு இதுதான் முதலாவது நேர்காணல் மிக்க மகிழ்ச்சியாகவுள்ளது வீடு தேடிவந்து நேரில் சந்தித்து எமது திறமையினை வெளிக்கொணர்வது புதையலை வெளிக்கொணர்வது போல... என்னைப்போல எமது மண்ணில் இன்னும் பலர் உள்ளனர் அவர்களையும் தங்களது இணையம் மூலமாக வெளிக்கொண்டுவரவேண்டும் என்பது எனது விருப்பமாகும் அத்தோடு சிலருக்கு தெரிந்த என்னை பலருக்கு தெரியப்படுத்தி களம் அமைத்த நியூமன்னார் இணையக்குழுமத்திற்கும் இவ்வளவு நேரமும் செவ்வி கண்ட வை.கஜேந்திரனாகிய உங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்.

மன்னாரில் இந்த விராங்கனையினைப்போல பலர் உள்ளார்கள் அவர்களின் திறமைக்கு மதிப்பளித்து களம் அமைத்து தகுதிக்கு ஏற்ப வாழ்வாதாரத்தினை உயர்த்திக்கொள்ளும் விளையாட்டு அலுவலர்கள் அதிகாரிகள் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தால் எமது மன்னார் மாவட்டம் அசுர வளர்ச்சி அடையும் என்பதில் ஐயமில்லை 




நியூமன்னார் இணையத்திற்காக
-வை-கஜேந்திரன்-




























   
கலைஞனின் அகம் கணனியில் முகம்.....இளம் வீராங்கனை செ.குணாளினி அவர்களின் அகத்திலிருந்து…. Reviewed by Author on July 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.