முதலிடம் பிடிக்கப் போவது யார்? பரபரப்பில் கிரிக்கெட் போட்டிகள்...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வென்று முதல் இடத்தை பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் அவுஸ்திரேலியா முதல் இடத்திலும் இந்திய இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இத்தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் 112 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடம் வகிக்கும். அதே வேளை 2-1 அல்லது 2-0 எனற கணக்கில் தொடரை இழந்தால் புள்ளி பட்டியலில் பின்னோக்கி செல்ல நேரிடும்.
இதில் வினோதம் என்னவென்றால் அவுஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது, முதல் போட்டி வருகிற யூலை 26 ம் திகதி தொடங்குகிறது.
இத்தொடரில் அவுஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் தொடரை இழக்க வேண்டும். அப்படி தொடரை இழக்குமானால் 111 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்துக்கு சென்றுவிடும். தொடரை வெற்றிகரமாக முடித்தால் அந்தணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கும்
மேலும் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதனால் இந்த மூன்று தொடர் முடிந்தவுடன் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கிறது.
முதலிடம் பிடிக்கப் போவது யார்? பரபரப்பில் கிரிக்கெட் போட்டிகள்...
Reviewed by Author
on
July 20, 2016
Rating:

No comments:
Post a Comment