அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு...
அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் என அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி நடைபெறுகிறது.
இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் பேசுகையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதில் தான் மிகுந்த பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலில் தான் வெற்றி பெறப்போவதாக கூறிய டிரம்ப், வாஷிங்டனில் உண்மையான மாற்றத்தை கொண்டு வருவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இவருக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் விரைவில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு...
Reviewed by Author
on
July 20, 2016
Rating:

No comments:
Post a Comment