சாமுவேல்ஸ், கிறிஸ் கெய்லுக்கு கிடைத்த கெளரவம்
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அதிரடி வீரர்களான சாமுவேல்ஸ், கிறிஸ் கெய்ல் ஆகியோருக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆண்டு விருது அறிவிக்கப்பட்டது.
இதில், ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீரராக சாமுவேல்ஸ், டி20 போட்டிகளின் சிறந்த வீரராக கிறிஸ் கெய்ல் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் சிறந்த டெஸ்ட் வீரராக டேரன் பிராவோ, சிறந்த அறிமுக வீரராக சுழற்பந்து வீச்சாளர் வாரிகன் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சமீபத்தில் நடந்த டி20 மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் ஸ்டாபானியா டெய்லர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் அவருக்கு சிறந்த டி20 மற்றும் ஒருநாள் வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சாமுவேல்ஸ், கிறிஸ் கெய்லுக்கு கிடைத்த கெளரவம்
Reviewed by Author
on
July 22, 2016
Rating:

No comments:
Post a Comment