அண்மைய செய்திகள்

recent
-

பெண்களை பலாத்காரம் செய்யும் எய்ட்ஸ் நோயாளி: தொழிலாக செய்யும் கொடுமை....


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மால்வேயில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர், அங்குள்ள பெண்களை பலாத்காரம் செய்து எய்ட்ஸ் நோயினை பரப்பி வரும் தொழிலை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Eric Aniva என்ற இந்நபர் அங்குள்ள கிராமங்களில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் பரீட்சியமானவர், காரணம் இவர் அப்பகுதியில் உள்ள பெண்களை பலாத்காரம் செய்து வருகிறார்.

Eric Aniva என்ற பெயரையும் தாண்டி Hyena என்ற பெயருடன் இவர் அழைக்கப்படுகிறார், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர், கிராமங்களில் வசிக்கும் பெண்களை பலாத்காரத்திற்கு உட்படுத்துகிறார், இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருவுற்றால் அதனை கலைத்து விடுகின்றனர்.

இவ்வாறு, ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தால் இவருக்கு கிடைக்கும் வருவாய் £5 ஆகும். இதுகுறித்து இவர் கூறியதாவது, 12 வயது பெண்கள் என்னுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர், சில பெண்கள் 12 அல்லது 13 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்.

உறவில் ஈடுபடும் பெண்கள் என்னிடத்தில் மகிழ்ச்சியை காண்கின்றனர் என்றும் இதனால் நான் பெருமை கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

மால்வேயில் உள்ள கிராமத்தில் 10 இல் ஒரு பெண்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ள Eric Aniva, தனது மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.

பலாத்காரம் செய்வதை ஒரு தொழிலாக செய்துவரும் இவருடன் வாழ்வதற்கே வெறுப்பாக உள்ளது என மனைவியர்களில் ஒருவரான Fanny Aniva கூறியுள்ளார்.

இது முடிவுக்கு வரவேண்டும் என்றும், இது எங்களுக்கும் பிற பெண்களுக்கும் துயரமான ஒன்று எனவும் கூறியுள்ளார்.

இவர் இவ்வாறு இந்த தொழிலை செய்து வருவதற்கு, அந்த கிராமத்தில் உள்ள தலைவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பெண்களை பலாத்காரம் செய்யும் எய்ட்ஸ் நோயாளி: தொழிலாக செய்யும் கொடுமை.... Reviewed by Author on July 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.