வலி.வடக்கில் சொந்த நிலம் உள்ள மக்களை மீள்குடியேற்றும் முயற்சிக்கு கண்டனம்!
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்து முகாம்களில்வாழ்ந்து வரும் சொந்த நிலம் இல்லாத மக்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்குவதாக கூறிவலி,வடக்கில் சொந்த நிலம் உள்ள மக்களையும் குடியேற்ற மேற்கொள்ளப்படும்முயற்சிகளையும், வலி,வடக்கு வசாவிளான் பகுதி மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில்மீள்குடியேற்ற கோரியும், வசாவிளான் மீள்குடியேற்ற சங்கம் போராட்டத்தை நடத்தவுள்ளது.
வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் யாழ்.மாவட்டத்தில்உள்ள 30ற்கும் மேற்பட்ட நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் அந்தமுகாம்களில் வாழ்கின்ற சொந்த நிலம் இல்லாத மக்களுக்கு மாற்று காணிகள் வழங்கஅரசாங்கம் நடவடிக்கை எடுத்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குரிய நிலத்தில்காணிகளையும், வீடுகளையும் அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருக்கின்றது.
படையினரின்பங்களிப்புடன் அமைக்கப்படும் அந்த வீடுகளில் நிலம் இல்லாத மக்களுடன் சேர்ந்துஅவர்களுடைய பெற்றோர்களான சொந்த நிலத்தை உடைய மக்களும் இருக்குமாறு அரசாங்கம்தற்போது கேட்டு வருகின்றது. இதனை வலி,வட க்கு மீள்குடியேற்ற சங்கம் வன்மையாககண்டித்துள்ளதுடன், அதனை நிராகரித்தும் இருக்கின்றது.
இதேபோல் வ லி,வடக்குமீள்குடியேற்ற குழு, வலி,வடக்கு வசாவிளான் மீள்குடியேற்ற குழு ஆகியனவும் நிராகரித்துள்ளதுடன் அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றது.
மேலும்யாழ்.மாவட்டத்தி ல் உள்ள வலி,வடக்கு மக்களின் நலன்புரி நிலையங்களின் தலைவர்களும்இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அத்துடன், மஹிந்த அரசாங்கம் இதேபோன்றுவலி,வடக்கில் ஒருபகுதி நிலத்தை மீள்குடியேற்றத்திற்கு அ னுமதித்து விட்டு பின்னர்வளலாய் பகுதியில் மாற்று காணிகளில் வலி,வடக்கு மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்தமை போன்று இந்த அரசாங்கமும் ஒருபகுதி நிலத்தை விடுவித்து விட்டு மிகுதிநிலத்தை மீள்குடியேற்றத்திற்கு விடுவிக்க விருப்பமில்லாமல், மாற்று காணிகளில்மக்களை மீள்குடியேற்றிவிட்டு மீள்குடியேற்ற பிரச்சினையை முடிக்க நினைக்கின்றது. எனகூறியிருக்கின்றனர்.
மேலும் மஹிந்த அரசாங்கம் வலி,வடக்கு மக்களை மாற்று காணிகளில்மீள்குடியேற்ற முயற்சித்த போது அதனை எதிர்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது அமைதியாக இருப்பது வேதனையளிக்கின்றது எனவும் கூறியிருக்கின்றனர்.
வலி.வடக்கில் சொந்த நிலம் உள்ள மக்களை மீள்குடியேற்றும் முயற்சிக்கு கண்டனம்!
Reviewed by Author
on
July 24, 2016
Rating:

No comments:
Post a Comment