ஐரோப்பாவில் முதல் முறையாக இடம்பெற்ற தீ மிதிப்பு!
சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று முற்பகல் பலலாயிரம் பக்தர்களின் பிரசன்னத்துடன் இடம் பெற்றது.
இந்த தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது,
ஐரோப்பாவில் முதல் தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Sri Vishnu Thurkkai Amman Temple - Switzerland
இதேவேளை, தீ மிதிப்புச் சடங்கினை முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பூசகர் தீமிப்பை நடத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் முதல் முறையாக இடம்பெற்ற தீ மிதிப்பு!
Reviewed by Author
on
July 24, 2016
Rating:

No comments:
Post a Comment