அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (29-07-2016) கேள்வி பதில்

கேள்வி:− 
எனது அன்பிற்குரிய சட்டத்தரணி சுதன் அண்ணா!நான் ஊறனியிலிருந்து(×−×−×).அண்ணா நான் ஒருவரை காதலித்தேன்.ஆனால் அவரது சூழ்நிலை காரணமாக அவர் திருமணம் பண்ணிடார்.நான் அவர் ஞாபகமாகவே திருமணம் பண்ணாது வாழ்கிறேன்.அண்ணா அவர் தற்போது மனைவியிடமிருந்து விவாகரத்திற்கு போட்டுள்ளார்.என்னால் அவரை மறக்க முடியவில்லை.அவரையே திருமணம் பண்ண போகிறேன்.விவாகரத்து பெற முன் அவருடன் சேர்ந்து வாழ முடியுமா அண்ணா?எனக்கு நல்வழி கூறுங்கள்.

பதில்:− அன்பான சகோதரியே!முதலில் தங்களை போன்ற சென்டிமென்ட் வாதிகளை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.காதல் வேறு சென்டிமென்ட் வேறு.காதல் உண்மையானது.ஆனால் சென்டிமென்ட் சுயநலமானது.ஏமாற்றுபவர்கள் கையாளும் ஒரு ஆயுதமே சென்டிமென்டாகும்.காதலித்தால் அது திருமணத்தில்தான் முடிய வேண்டும்.அதை விடுத்து, சூழல்,சூழ் நிலைமை என்று செனடிமென்ட் பேசுவது பொய்யர்களின் குறளாகும்.உங்களுடைய காதலன் திருமணம் பண்ணிட்டார்.அத்துடன் அவர் வாழ்க்கை வேறு.அவர் இன்னொரு பெண்ணின் கணவர்.பிறர் கணவனை விரும்புவது காதலா?அவ்வாறு
விரும்பும் போது அவளின் வாழ்க்கையை சீரழித்த பாவம் உங்களை சாராதா?
நீங்கள் காதலிக்கும் போது அவர் மனதில் நீங்க இருந்தீங்க.தற்போது அவருடைய மனைவி இருக்கிறார்.இனியும் அந்த இடம் உங்களுக்கு தேவையா?நீங்க திருமணமாகாத கன்னி.உங்க எதிர் காலத்தினை யோசித்தீங்களா?ஆண்கள் சாதாரணமாக இன்னொரு பெண்ணோடு உறவு வைத்திடுவார்கள்.ஆனால் பாதிப்பு இரு பெண்களுக்கு.திருமணமான ஆண்/பெண் இன்னுமொருத்தி/ஒருத்தன் இருப்பதனாலதானே விவாகரத்திற்கு செல்கின்றனர்.இல்லாவிடின் அவளோடு/அவனோடுதானே வாழனும்...?நிங்கள் அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடாவிடின் அவர்கள் ஏன் விவாகரத்திற்கு போக வேண்டும்?
அன்பான சகோதரியே!நான் கோபப்படுவதற்கும் காரணமுள்ளது.அதனை புரிந்து கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.என்னதான் நாம் வாய்கிழிய பென்ணியம் எனப் பேசினால் நமது சமூகத்தின் Setting ஆண்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன.ஆகவே சேர்ந்து வாழலாம், மன வேற்றுமை வந்தால் நண்பர்களாக் பாதிப்பு ஏதும் இன்றி பிரிந்து விடலாம் என்பதெல்லாம் கேட்க நன்றாகத்தான் உள்ளன.ஆனால் நடைமுறையில்? பாதிப்பு ஆணுக்கு அதிகம் இல்லை. சம்ப்ந்தப்பட்ட பெண்ணுக்குத்தான் அதிகம். அம்மாதிரி சேர்ந்து வாழும் ஜோடிகளுக்கு வரும் எதிர்ப்பு சுற்றிலும் உள்ள மனிதர்களால் அந்த ஜோடியில் உள்ள பெண்ணுக்கு எதிராகத்தான் காட்டப்படுகிறது.
இன்னும் ஒரு விஷயம் உடற்கூறு. ஆண் கர்ப்பம் அடைவதில்லை,பெண் கருவுறுகிறாள்.இரண்டு மூன்று பிரசவங்களுக்கு பிறகு அவள் உடற்கட்டு குலைகிறது. ஆகவே அவளுடன் சேர்ந்து வாழும் ஆணுக்கு அவள் மேல் ஈர்ப்பு குறைந்தால், பேசாமல் கழண்டு கொள்ள முடிகிறது. இதுவே சட்டபூர்வமான திருமணமாக இருந்தால் பெண்ணுக்கு எல்லா சட்டப் பாதுகாப்புகளும் உண்டு. ஆகவே கனம் இல்லாத விஷயங்களுக்கெல்லாம் சட்டபூர்வமான திருமண பந்தம் உடைக்கப்படுவதில்லை.
சேர்ந்து வாழும் ஜோடியில், பெண்ணுக்கு ஏற்படும் மேலே குறிப்பிட்ட பலவீனங்களால் காலப்போக்கில் அவள் எங்கே ஆண் தன்னை விட்டு பிரிந்து விடுவானோ என்னும் பயத்திலேயே அவன் சொல்லுவதையெல்லாம் செய்வாள்.இதில் இருக்கும் விதிவிலக்குகளில் பார்த்தால் ஒன்று அப்பெண் மிகுந்த புத்திசாலியாக இருந்து தன் பலவீனங்களை மறைத்து நடிக்க வேண்டும், அல்லது ஆணுக்கும் சில உடல்நலக்குறைவு ஏதேனும் வந்திருக்கலாம், அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட காரணங்களாக இருக்கலாம்.
நான் கூற வந்ததே சேர்ந்து வாழ்வதில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம், அவற்றால் பென்ணுக்குத்தான் பாதிப்பு அதிகம் என்பதுதான். அவை எல்லாம் முதலில் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அவற்றை கவனத்தில் கொள்வதே புத்திசாலித்தனம்.சேர்ந்து வாழ்வது, பிரிவது, அந்த உறவில் பெற்ற குழந்தைகளை பங்கிடுவது, பிறகு வேறு துணையை நாடுவது ஆகிய விஷயங்கள் எமது சமுகத்தில் இன்னும் சாதாரணமாக வரவில்லை.அவ்வளவுதான்...ஆகையால், பெண்ணே! ஜாக்கிரதையாக இரு. இப்போதைக்கு திருமணம் இன்றி சேர்ந்து வாழ ஒத்துக் கொள்ளாதே. பாதிப்பு உனக்குத்தான் அதிகம்.
சகோதரியே இன்று நீங்கள் திருமணம் பண்ணப் போகும் காதலனின் மனைவிக்கு ஏற்படும் அதே நிலைமை நாளை உங்களுக்கு என்பதனை மறக்காதீங்க.அந்த நிலையில்"சுடலை ஞானம்"பெறுவதனை விட தற்போதே தீர்க்கமாக யோசித்து முடிவெடுங்கள்.நீங்கள் அவரை விட்டு விலகினாலே அவர்களுக்கான விவாகரத்து அவசியம் இல்லை.

குறிப்பு 
உங்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.


அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.



கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி



newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .
இன்றைய (29-07-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on July 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.