யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினூடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.(படம்)
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினூடாக மன்னார் மாவட்டத்தில் 'சிறுவர் பாதுகாப்பு செயற்பாடுகளை உறுதிப்படுத்தல்' எனும் நோக்காக கொண்டு (U.N.I.C.E.F) நிறுவனத்துடன் இணைந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலக பிரிவுகளிலும் அதன் செயற்பாட்டு பங்காளர்களாக கடந்த வருடங்களாக செயற்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு அங்கமாக சமூக பாதுகாப்பு தேவைப்படுகின்ற சிறுவர்களை கிராம ரீதியாக இனங்கண்டு அவர்களிற்கான உள்ளீடுகளையும் வழங்கி வைத்துள்ளனர்.
அதன் ஒரு கட்டமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய 5 பிரதேச செயலகங்களிலும் 40 பயனாளிகளுக்குமான 40 துவிச்சக்கரவண்டிகள் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினூடாக மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் இறுதி நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட 8 பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் மாவட்ட உத்தியோகஸ்தர் வி.நிசாந்தன் பீரிஸ் தெரிவித்தார்.
.
மன்னார் நிருபர்-
(29-07-2016)
அதன் ஒரு அங்கமாக சமூக பாதுகாப்பு தேவைப்படுகின்ற சிறுவர்களை கிராம ரீதியாக இனங்கண்டு அவர்களிற்கான உள்ளீடுகளையும் வழங்கி வைத்துள்ளனர்.
அதன் ஒரு கட்டமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய 5 பிரதேச செயலகங்களிலும் 40 பயனாளிகளுக்குமான 40 துவிச்சக்கரவண்டிகள் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினூடாக மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் இறுதி நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட 8 பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் மாவட்ட உத்தியோகஸ்தர் வி.நிசாந்தன் பீரிஸ் தெரிவித்தார்.
.
மன்னார் நிருபர்-
(29-07-2016)
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினூடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.(படம்)
Reviewed by NEWMANNAR
on
July 29, 2016
Rating:

No comments:
Post a Comment