தங்கத்துக்கு மாற்றாக அறிமுகமாகிறது மற்றொரு புதிய உலோகம்!
தங்கத்திற்கு மாற்றாக 'லீடிங் ஜுவல்லர்ஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற, உலக தங்க நகை கூட்டமைப்பு, 'லுமினக்ஸ் யூனோ' என்ற புதிய மதிப்புமிகு உலோகத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
தங்கம், பிளாட்டினம், பலேடியம், வெள்ளி ஆகிய உலோகங்களின் கலவையில் இருந்து, 'லுமினக்ஸ் யூனோ' உலோகம் தயாரிக்கப்படுகிறது.
தற்போது, 10 கிராம், 'லுமினக்ஸ் யூனோ' உலோகத்தின் விலை, 1,250 ரூபாய்.
தங்கம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு அடுத்தபடியாக, 'லுமினக்ஸ் யூனோ' என்ற உலோகத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம் என, அந்த கூட்டமைப்பு உறுதி அளித்துள்ளது.
தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்து வருவதால், நகைக் கடை உரிமையாளர்கள், தங்கம், பிளாட்டினம் நகைகளுக்கு மாற்றாக, 'லுமினக்ஸ் யூனோ' உலோகத்தால் ஆபரணங்களை செய்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது, இந்த உலோகம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் கிடைக்கிறது.
தங்கத்துக்கு மாற்றாக அறிமுகமாகிறது மற்றொரு புதிய உலோகம்!
Reviewed by Author
on
July 30, 2016
Rating:

No comments:
Post a Comment