அண்மைய செய்திகள்

recent
-

துருக்கி இராணுவ புரட்சி! 42 பேர் பலி! இலங்கையர்களின் நிலை குறித்து விசாரணை!


துருக்கியின் ஆட்சி அதிகாரத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ள போதிலும், அந்நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் ஜனாதிபதி டையின் எர்டோகன் அறிவித்துள்ளார்.

துருக்கியின் அரச தொலைக்காட்சியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள இராணுவம், நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் மற்றும் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. அத்துடன் துருக்கியின் அதிகாரம் சமாதானப் பேரவையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், சமூக இணையத்தளங்களுக்கும் தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் முக்கிய நகரங்களில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன், போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகொப்டர்கள் துருக்கி தலைநகரின் பறந்துகொண்டிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் துருக்கி புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், பொது மக்கள் கூடியிருந்த பகுதிகள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துருக்கி பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதியிலும் இரண்டு வெடிச் சத்தங்கள் செவிமடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 17 பொலிஸாரும் உள்ளடங்குவர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை துருக்கியில் உள்ள இலங்கையர்கள் நிலை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் பீ.எம்.அம்ஸா தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை எந்தவித தகவல்களும் பதிவாகவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

துருக்கி இராணுவ சதிப் புரட்சி முறியடிப்பு!

துருக்கியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக துருக்கி உள்நாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

அங்காராவில் ரோந்து வரும் அனைத்து இராணுவ ஹெலிகொப்டர்களும் சுட்டு வீழ்த்தப்படும் என துருக்கி பிரதமர் பினலி யில்த்ரிம் எச்சரித்துள்ளார்.

சதி புரட்சியாளர்களால் கைது செய்து வைத்திருந்த இராணுவத் தலைமை தளபதி விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் உளவுத் துறை அறிவித்துள்ளது.

சதிப் புரட்சியில் ஈடுபட்ட இராணுவத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இஸ்தான்பூலின் பாதிஹ் பகுதியில் சதி புரட்சியில் ஈடுபட்ட இராணுவ தரப்புக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் நடைபெறுவதாகவும், புரட்சி தோல்வியை நோக்கி செல்வதாகவும் துருக்கி முழுவதும் அர்தூகானுக்கு ஆதரவாக மக்கள் வீதிக்கு வந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சதி புரட்சியை திட்டமிட்டவர் இராணுவ தளபதி ஆலோசகர் கேர்ணல் முஹர்ரம் கோஷா என்று தகவல் வெளியாகியுள்ளது.

சதி புரட்சி தோல்வியடைந்ததை TRT தொலைக்காட்சி ஊழியர்கள் கொண்டாடுவதாகவும் அதன் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பியதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி இராணுவ புரட்சி! 42 பேர் பலி! இலங்கையர்களின் நிலை குறித்து விசாரணை! Reviewed by NEWMANNAR on July 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.