"கற்றலுக்கு முன்னுரிமை கொடுப்போம்"-பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருக்கும் மந்துவில் கிராமத்தில் அமைந்து இருக்கும் அரசரத்தினம் வித்தியாலயத்தில் சுமார் 200 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.இப் பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தினரால் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக லண்டன் தேசத்தில் வசித்துவரும் அருள்நேசன் அவர்களின் நிதி உதவியுடன் இப் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி புத்தகப்பைகள்,கொப்பிகள் மற்றும் பேனைகள் என்பன கற்றல் நடவடிக்கைக்காக 01.07.2016 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு பாடசாலை அதிபர் மா.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்விற்கு புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் சுப்ரமுநீஸ்வரன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,நிதி உதவி வழங்கிய லண்டன் தேசத்தில் வசித்துவரும் அருள்நேசன் அவர்களும்,சனசமூக கடல்த்தொழில் சங்கத்தினர்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்,அருட் சகோதரி மேரிரோசி,ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் உதவிகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் இவ் உதவிகளை புரிந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.
பின்பு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கும் பாரளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் கலந்துரையாடலும் இடம்பெற்றது
"கற்றலுக்கு முன்னுரிமை கொடுப்போம்"-பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்
Reviewed by NEWMANNAR
on
July 04, 2016
Rating:

No comments:
Post a Comment