அண்மைய செய்திகள்

recent
-

தமிழக மீனவர்களுக்கு கடலில் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி! (இலங்கை அரசாங்கம் ஆராய்வு)

இலங்கை - இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழ் நாட்டை சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட இழுவைப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் தொழில் செய்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் இலங்கை கடற்பரப்பில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இந்திய இழுவைப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அனுமதிப்பத்திரம் வழங்குவதன் ஊடாக அந்த எண்ணிக்கையை 250 ஆக குறைக்க முடியும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

மேலும் இந்திய இழுவைப் படகுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி வழங்கப்படுவது தொடர்பில் தகவல் வெளியாகியிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இதுவரை இதுகுறித்து இறுதி தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு சட்டபூர்வமான அனுமதி வழங்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து கோரிவருகிறது.
எனினும், இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய பதிலை இதுவரை வழங்கவில்லை.

அப்படியான அனுமதியினை இலங்கை வழங்குவதானால் மீனவ சமூகத்துடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதனிடையே, இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு அழுத்தம் கொடுத்து, தமிழக இராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

தமிழக வாழ்வுரிமைக்கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
இதன்போது அவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கட்சியின் ஸ்தாபகர் டி வேல்முருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதாக்கட்சி, மீனவர்களின் விடயத்தில் காட்டுகின்ற அசமந்தபோக்கு கண்டிக்கத்தக்கது என வலியுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் தமிழக மீனவர்களின் வாழ்வை அடிப்படையாக கொண்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக்காணவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழக மீனவர்களுக்கு கடலில் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி! (இலங்கை அரசாங்கம் ஆராய்வு) Reviewed by NEWMANNAR on July 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.