அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 300 பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ-Photos

வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ 'செமட்ட செவன' தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 300 பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.

மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமையாளர் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது 'செமட்ட செவன' தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 300 பயனாளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 3 இலட்சம் ரூபாய் வரையிலான காசோலைகளை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.

மேலும் தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு சீமேந்து பக்கற்றுக்களும் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான்,ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.சமியூ முஹமது பஸ்மி, ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் இளைஞர் அணி செயலாளர் டி.பெணாண்டாஸ் கூஞ்ஞ, பிரதேசச் செயலாளர்கள், சர்வமதத்தலைவர்கள் மற்றும் பயனாளிகள் என நூற்றுக்கனக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



















-மன்னார் நிருபர்-

(4-07-2016
மன்னாரில் 300 பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ-Photos Reviewed by NEWMANNAR on July 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.