வருடத்தின் வெப்பமான நாள்! சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்கள்...
சுவிசில் இந்த வாரம் கடும் வெயில் கொளுத்த இருப்பதால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படி வானிலை ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சூரியனில் இருந்து ஓசோன் வளிமண்டலம் வழியாக வரும் வெப்பநிலை அதிகமாக உயர்ந்துள்ளது. இது கடந்த திங்கட்கிழமையன்று உச்சகட்ட நிலையை எட்டியது.
ஆபத்தான UV கதிர்வீச்சுகளை கொண்ட இந்த வெப்பம் உடல்நலத்திற்கு பல தீங்குகளை விளைவிக்க கூடியது. இது சுவாச பிரச்சனைகள், தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதனால் வெளியில் உடற்பயிற்சி செய்வதையோ, வெயிலில் அலைவதையோ தவிர்க்க வேண்டும். மேலும், காலை 11 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வெளியில் இருப்பதை தவிர்க்கவும்.
ஓசோன் வழிமண்டலம் வழியாக வரும் வெப்பநிலை அளவுக்கு அதிகமாக இருப்பதால நேற்று மற்றும் இன்று வருடத்தின் மிகவும் வெப்பமான நாளாக இருக்கும்.
மேலும், கார் ஓட்டுவது போன்றவற்றால் ஏற்படும் காற்று மாசுடுபடுதலும் சுற்றுச்சுழலின் வெப்ப நிலையை மிகவும் அதிகரிக்கும். இதனால் கார் பயன்படுத்துவதை இந்த வாரம் தவிர்க்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் சுவிஸ் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
வருடத்தின் வெப்பமான நாள்! சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்கள்...
Reviewed by Author
on
July 20, 2016
Rating:

No comments:
Post a Comment