மாந்தை சோல்ட் லிமிடெட் நிறுவனத்தால் மன்னார் உப்பளத்தில் அமைக்கப்படவுள்ள சுற்றுலா விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
மாந்தை சோல்ட் லிமிடெட் நிறுவனத்தால் மன்னார் உப்பளத்தில் அமைக்கப்படவுள்ள சுற்றுலா விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 28-07-2016 வியாழன் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
மன்னார் உப்பளத்தின் பணிபுரியும் தொழிலாளிகளின் கடின உழைப்பின் லாபத்தில் இருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் 40 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்ட சுற்றுலா விடுதி அடிக்கல் நாட்டுவிழா இன்று மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
நிகழ்விற்கு மும்மதத் தலைவர்களும், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன், சிறப்பு விருந்தினராக மாகாண சபையின் உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மாந்தை சோல்ட் லிமிட்டெட் இன் தலைவர், மற்றும் ஏனைய பிரமுகர்கள் வர்த்தக சங்க தலைவர் திணைக்களத்தலைவர்கள் பணிப்பாளர்கள் அரச அதிகாரிகள் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மக்களுக்கு கொடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் அவர்களது வரிப்பணத்தில் இருந்தே மீண்டும் மக்களுக்கு வருகின்றது. என்பதை முதலில் உணர்ந்துகொள்ளவேண்டும் என்றும், நம்முடைய சொந்த பொருட்களில் நாம் காட்டும் அதே அக்கறையை பொதுச் சொத்துக்கள் மட்டிலும் காட்டவேண்டும், காரணம் அது நம்மோடு மாத்திரம் முடிந்துபோவதல்ல, நம்முடைய சந்ததிக்கு தொடர்ந்து பயன் தரும் வண்ணம், அரசு தருகின்ற அபிவிருத்தி திட்டங்களை பொக்கிஷங்களாக நாம் பாதுகாக்கவேண்டும் என்றும், அவ்வாறு நாம் செய்யும்போதே நம்முடைய வருங்கால சந்ததியும் அதனால் பூரண பலனை அடையும் எனவும் தெரிவித்ததோடு, குறித்த இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மாந்தை உப்பள லிமிடெட் நிறுவனத்திற்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அமைச்சரின் உரையை தொடர்ந்து பேசிய விருந்தினர்களின் உரையின் சாரம்சமே மன்னாரின் அபிவிருத்தி திட்டங்களை யாராக இருந்தாலும் கட்டாயம் செயற்படுத்த வேண்டும் ஏன் எனில் மன்னார் மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது இப்படியான அபிவிருத்தி திட்டங்கள் மூலமே முதன்மையான மாவட்டமாக முன்னேறும் அதற்கு மன்னார் மக்களிடையே ஒற்றுமையான செயற்பாடுகள் அவசியம்.
மன்னார் உப்பளத்தின் வரலாற்றினை மிகவிரைவில் எதிர்பாருங்கள்....
மாந்தை சோல்ட் லிமிடெட் நிறுவனத்தால் மன்னார் உப்பளத்தில் அமைக்கப்படவுள்ள சுற்றுலா விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
Reviewed by Author
on
July 28, 2016
Rating:
No comments:
Post a Comment