அண்மைய செய்திகள்

recent
-

சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.....


வவுனியா மாவட்டம் மற்றும் வடபகுதி தமிழர்களின் கையகப்படுத்தப்பட்டுள்ள இடங்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் வவுனியா - புதுக்குடியிருப்பு இராணுவ முகாமிற்கு முன்பாக இன்று காலை வேலையில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுடைய காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றக்கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நல்லாட்சி ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் கடந்தும் தமிழ் மக்களுக்கான தீர்வினை நல்லாட்சி பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், “தாம் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக வடக்கில் பொதுமக்களது நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படும்” எனக்கூறிய நல்லாட்சி அதனை மறந்து விட்டதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, நல்லாட்சி தமிழ் மக்களது நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிரான சுலோகங்களை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்..... Reviewed by Author on July 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.