நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.......!
உலகக்கிண்ணம் தகுதி சுற்று போட்டிகளுக்கான அர்ஜென்டினா வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அவர் மீண்டும் நாட்டிற்காக களமிறங்கி விளையாட உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து அணித்தலைவராக திகழ்ந்து வந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கோபா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டியில் சிலியிடம், அர்ஜென்டினா தோல்வியை தழுவியதை தொடர்ந்து உடனடியாக சர்வதேச போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், உலகக்கிண்ணம் தகுதி சுற்று போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளன. இதில் அர்ஜெண்டினா அணி, உருகுவே மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுடன் விளையாட உள்ளது. இந்நிலையில் இதற்கான வீரர்கள் பட்டியலில் 29 வயதான மெஸ்ஸியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து அர்ஜென்டினா ஊடகம் ஒன்றிற்கு மெஸ்ஸி அளித்துள்ள பேட்டியில், அர்ஜென்டினா அணிக்காக தான் மீண்டும் விளையாட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது நாட்டை மிகவும் நேசிப்பதாகவும், அதற்கு தன்னால் ஆன சேவையை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, தனக்குள் நிறைய கேள்விகள் எழுந்ததாகவும், ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் மெஸ்ஸி கூறினார்.
ஆனால் அர்ஜென்டினா கால்பந்து அணியில் சரிசெய்ய வேண்டியவை நிறைய உள்ளதாகவும், அவற்றை உள்ளிருந்து தான் செய்ய வேண்டும் என்றும் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.
நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.......!
Reviewed by Author
on
August 13, 2016
Rating:

No comments:
Post a Comment