நல்லாட்சி என்பது நரியாட்சியாகுமா?யுத்தத்தால் எல்லாவற்றையும் பறிகொடுத்த தமிழர்களை ஏறி மிதிக்கின்ற அளவில் ஒரு முஸ்லிம் அமைச்சர் செயற்படுகிறார் எனில், அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களை விடுத்து அங்கு வாழ்ந்த மக்களை குடியமர்த்துதல், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனர்வாழ்வு, யுத்தத்தில் உயிர் இழந்தவர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவு-காணாமல்போனவர்களுக்கு நடந்ததென்ன என்ற விடயங்கள் தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நல்லாட்சி என்றால் அது தமிழர்களுக்கும் நல்லாட்சியாக இருக்க வேண்டும்.
ஆனால் நல்லாட்சி தமிழர்களின் விடயத்தில் நரி ஆட்சியாக செயற்படுகிறதோ என்று எண்ணும் அளவில் நிலைமை உள்ளது.
யுத்தத்தால் இனத்தையே அழியக் கொடுத்தவர்கள் தமிழர்கள். ஆனால், வட மாகாணத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அமைச்சர் தமிழ் மக்களையும் தமிழர் அரசையும் இழிவுபடுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார்.
யுத்தத்தால் எல்லாவற்றையும் பறிகொடுத்த தமிழர்களை ஏறி மிதிக்கின்ற அளவில் ஒரு முஸ்லிம் அமைச்சர் செயற்படுகிறார் எனில், அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? அதை தடுத்து நிறுத்தாதது ஏன்?
ஒரு சிறுபான்மை இனத்தின் அமைச்சரைக் கொண்டு தமிழ் மக்களை நசுக்க நினைப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறித்த முஸ்லிம் அமைச்சருக்கு எதிராக தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்தால் இரு இனங்களுக்குமிடையில் மோதல் உருவாகும் அல்லவா?
இந்த மோதலை உருவாக்கும் நோக்கிலேயே அந்த முஸ்லிம் அமைச்சர் செயற்படுகிறார் என்பது நல்லாட்சிக்குத் தெரியாதா? தெரிந்தால் அதைத் தடுக்காதது ஏன்? தமிழ் மக்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதை சிங்கள மக்கள் எதிர்ப்பர் என்பது போல ஒரு காட்டாப்பைக் காட்டி தமிழ் அரசியல் தலைமையை ஏமாற்றுகின்ற கொடுமைத்தனத்துக்கு ஓர் எல்லையே இல்லையா?
எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கொடுத்த தற்காக வற்வரியை ஏற்றிய போதிலும் அதையும் ஏற்று வரவு செலவுத்திட்டத்தை ஆதரிக்கக்கூடிய அறிவீனங்கள் தமிழ்த் தரப்பில் இருப்பதால் தமிழர்களை எப்படியும் ஏமாற்றலாம் என்று நினைப்பதுதான் நல்லாட்சி என்றால்,
அது ஒருபோதும் நல்லாட்சியாக இருக்கமுடியாது. மாறாக நரி ஆட்சி என்றே அதனை அழைக்கமுடியும்.
எதுவாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ் மக்கள் நம்பினர். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவது ஜனாதிபதியின் தார்மீகக் கடமை என்பதை மட்டுமே இப்போதைக்கு நாம் சொல்லி வைக்கமுடியும்.
வலம்புரி ஆசிரியர்
நல்லாட்சி என்பது நரியாட்சியாகுமா?யுத்தத்தால் எல்லாவற்றையும் பறிகொடுத்த தமிழர்களை ஏறி மிதிக்கின்ற அளவில் ஒரு முஸ்லிம் அமைச்சர் செயற்படுகிறார் எனில், அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?
Reviewed by NEWMANNAR
on
August 13, 2016
Rating:

No comments:
Post a Comment