அண்மைய செய்திகள்

recent
-

சாள்ஸ் எம்.பி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும்!! - ரிஷாட்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் என்னுடைய சிறப்புரிமைகளை மீறும் வகையில் பல்வேறு அவதூறான விடயங்கை வெளியிட்டு இவ்வுயரிய சபையை தவாறாக வழிநடத்தியுள்ளார் என
அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன் சபாநாயகர் கரு ஜயசூரியவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.


அவரது கருத்துக்கள் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறியுள்ளதோடு என்னையும் எனது ஆதரவாளர்களினதும் புண்படுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன் அவரது உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறும்இ அவர் இந்த உரையினை ஆற்றியமைக்காகஇ இந்த சபையில் பகிரங்கமாக மன்னிப்புக்கோருமாறும்இ இல்லையெனில் அதற்குத் தகுந்தவாறான நடவடிக்கையை சபாநாயகர் எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பாக விசேட கூற்றை முன்வைத்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்இ பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடத்திலான கேள்வி நேரத்தின்போதுஇ வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நான் சபையில் பிரசன்னமாகி இல்லாத நிலையில்இ பாராளுமன்ற நிலையியற் கட்டளை தொடர்பாக என்னுடைய சிறப்புரிமைகளை மீறி பல்வேறு அவதூறான விடயங்களை தெரிவித்ததோடுஇ இந்த உயரிய சபையை பிழையாக வழி நடத்தியுள்ளார் என்பதை மிகவும் வேதனையுடன் இந்த சபையின் கவனத்துக்கும்இ உங்களுக்கும் கொண்டுவர விரும்புகின்றேன்.

திட்டமிட்ட அடிப்படையில் தொடர்ச்சியாக அவர் இவ்வாறான விடயங்களை இந்த சபையில் கூறி வருகின்றமையானதுஇ ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களை மீறுகின்ற ஒருசெயல் என்பதை நான் ஆரம்பத்திலே கூறி வைக்க விரும்புகின்றேன். பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் சட்டத்தின் 84 ஆம் பிரிவில் பல உபபிரிவுகளை இவர் பகிரங்கமாகவே மீறிஇ எனது சிறப்புரிமையை இந்தச் சபையில் அவமதித்தமையானதுஇ என்னை மாத்திரமின்றி பல இலட்சக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள எனது கட்சியின் ஆதரவாளர்களினதும் மனதைப் புண்படுத்தியுள்ளமை மிகவும் மோசமான ஒரு செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.

அவர் தனது உரையில் என்னை மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரது மகனென்று நான் கூறித் திரிந்ததாகஇ என் மீது அபாண்டங்களை கூறியுள்ளார். எனது தந்தையின் பெயர் அப்துல் ரஹ்மான் பதியுதீன் என்பதையும்இ பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸுக்கும் இந்த சபைக்கும் நான் தெளிவாக சொல்லிவைக்க விரும்புகின்றேன். அவரது இந்தக் கூற்றின் தாற்பரியம் எவ்வளவு பாரதூரமானது என்பதை இந்தச் சபை புரிந்துகொள்ள வேண்டும். மேலும் நீதி மன்றத்துக்கு கல்லெறிந்தவர் என என்னை இந்த உயர்சபையில் கூறிஇ ஒரு அப்பட்டமான அவதூறின் மூலம் இந்தச் சபையினையும்இ நாட்டு மக்களையும் பிழையாக வழிநடத்த இவர் முயற்சித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இந்த நாட்டின் எந்தவொரு நீதி மன்றத்திலும்இ எனக்கெதிராக வழக்குத் தொடரப்படவில்லை என்பதையும்இ எந்தக் குற்றச்சாட்டு இல்லை என்பதையும்இ இது ஓர் அப்பட்டமான பொய் என்பதையும் இந்த உயர் சபையின் கவனத்துக்கு நான் கொண்டுவர விரும்புகின்றேன்.

அவர் தனது உரையில்இ ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக எனது பெயரைக் கூறி நிதிமோசடிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக என்னைப்பற்றி கூறியுள்ளார்.

ஏறத்தாள இரண்டு கோடியே பத்து இலட்சம் மக்கள் வாழும் இந்த நாட்டில் எனது தனிப்பட்ட அரசியல் வளர்ச்சி மற்றும் எனது கட்சி மூவின மக்கள் மத்தியிலும் பெற்றுவருகின்ற அமோக வரவேற்பு மற்றும் அதன் வளர்ச்சி என்பவற்றை சகித்துக்கொள்ள முடியாது காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய ஒரு சிறுபான்மை கட்சியில் தோல்வியுற்ற வேட்பாளர் ஒருவரால் என்னைப்பற்றி முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும்இ எந்தவொரு விசாரணைகளும் மேற்கொள்ளப்படாதும் நிரூபிக்கப்படாத நிலையிலும் சார்ல்ஸ் எம்.பி சம்பிரதாயங்களை மீறி இவ்வாறு உரையாற்றி இருப்பதானதுஇ என்னையும் எனது மக்களையும் அவமதிக்கின்ற ஒரு செயலாகவே நான் கருதுகின்றேன்.

மேலும் அவர் இந்த உயர்சபையிலே மீண்டும் மீண்டும் என்னைப்பற்றி பிழையான தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றார் என்பதைஇ நான் ஹன்சாட்டை ஆதாரமாக வைத்து உங்கள் கவனத்துக்காக கொண்டு வருகின்றேன். 2016 மார்ச் 23 ஆம் திகதி புதன்கிழமை வெளிவந்த ஹன்சாட் 756 ஆவது பக்கத்தில் காணப்படும் உரையின் ஒரு பகுதியில் என்னுடைய பெயரை குறித்து அவர் என்னை மோசமாக கேவலப்படுத்தியுள்ளார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மன்னார்இ வங்காலை எனும் பெரிய கிராமத்தில்இ எனது கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை நான் எனது அமைச்சில் இணைத்திருப்பதாகக் கூறி இந்த சபையில் பேசக்கூடாத விடயங்களை பேசி எனது சிறப்புரிமையை மீறியுள்ளார். அதேபோன்று 2016 ஏப்ரில் 07 ஆம் திகதி வியாழக்கிழமை வெளிவந்த ஹன்சாட்டில் என்னைப்பற்றி அவர் பல பொய்களை கூறியுள்ளார். அது ஹன்சாட்டில் பதியப்பட்டுள்ளது.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 84 இல் பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர் ஒருவர் 84 (v), 84(vi), 84(vii), 84(viii) ஆகிய உபபிரிவுகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர் அதை முற்றாக மீறியிருக்கின்றார். அதனடிப்படையில்இ முதலில் எனது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறி ஆற்றியுள்ள இந்த உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறும்இ இரண்டாவதாக அவர் இந்த உரையினை ஆற்றியமைக்காக இந்த சபையில் பகிரங்கமாக மன்னிப்புக்கோருமாறும் இல்லையெனில் அதற்குத் தகுந்தவாறான நடவடிக்கையை கௌரவமான சபாநாயகராக இருக்கும் நீங்கள் எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

மீள்குடியேற்ற செயலணி;கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்த ரணில்

வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை மீளப்பெறுமாறு கூட்டமைப்பு வலியுறுத்தல்

மன்னார் உப்பளத்தையும் விட்டு வைக்காதா வன்னி அமைச்சர் - பாராளுமன்றத்தில்  அம்பலப்படுத்திய   பா .உ  சாள்ஸ் நிர்மலநாதன் 



சாள்ஸ் எம்.பி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும்!! - ரிஷாட் Reviewed by NEWMANNAR on August 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.