10 லட்சம் பேருக்கு கண்ணில் வெள்ளை புரை (cataract) ஏற்படும்.
எதிர்வரும் 5 ஆண்டுகளில் ஒரு மில்லியன் இலங்கையர்களின் கண்களில் இருந்து வெள்ளை புரையை அகற்றும் சத்திர சிக்சையை மேற்கொள்ளும் தேவை எழுந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
உலக கண் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் விஷன் 2010 திட்டம் இன்று ஒழுங்கு செய்த நடைபயணத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கண் பார்வை குறைப்பாடுகளை குறைக்க விஷன் 2020 அலுவலகத்தின் மூலம் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கியுள்ளோம்.மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரின் கண்களில் வெள்ளை புரைகளை அகற்றும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளோம்.
இலங்கையின் சனத் தொகையில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் கண் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையர்களில் 1.7 வீதமானோர் கண் பார்வை இல்லாதவர்களாக இருப்பது கவலைக்குரியது எனவும் மருத்துவர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்
10 லட்சம் பேருக்கு கண்ணில் வெள்ளை புரை (cataract) ஏற்படும்.
Reviewed by NEWMANNAR
on
October 13, 2016
Rating:

No comments:
Post a Comment