பணிப்பெண்ணாக துபாய் செல்ல முற்பட்டவருக்கு வழியில் நேர்ந்த கதி!
சுற்றுலாப் பயணிகளின் விசா மூலம் பெண் ஒருவரை துபாய்க்கு பணிப்பெண்ணாகவேலைக்கு அனுப்பிய நபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கைதுசெய்துள்ளது.
குறித்த பெண் துபாய்க்கு செல்ல முற்பட்ட போது போலி கடவுச்சீட்டு காரணமாக கைதுசெய்யப்பட்டிருந்தார்.
சுற்றுலா விசா மூலம் துபாய் செல்ல முயற்சித்த பெண் வழங்கிய தகவலின்அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கைது செய்யப்படும் போது அவரிடம் 9 சட்டவிரோத கடவுச்சீட்டுக்கள்இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை பகுதியை சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலதிக விசாரணைகள்முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
பணிப்பெண்ணாக துபாய் செல்ல முற்பட்டவருக்கு வழியில் நேர்ந்த கதி!
Reviewed by NEWMANNAR
on
October 13, 2016
Rating:

No comments:
Post a Comment