அண்மைய செய்திகள்

recent
-

முத்தரிப்புத்துறை கிராம மீனவர்கள் மத்தியில் தொடர் அச்ச நிலை- வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடற்படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து தற்போது வரை அப்பிரதேசத்து மீனவர்கள் அச்சத்தின் காரணமாக கடற்தொழிலுக்கு செல்லாத நிலை காணப்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்தார்.


முத்தரிப்பு துறை கிராமத்தில் கடந்த சில தினங்களாக திருட்டுச்சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் கடந்த (18) செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் குறித்த கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் சிலர் செல்ல முற்பட்ட போது வீட்டில் உள்ளவர்கள் கண்டு சத்தமிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த நபர்கள் உடனடியாக அருகில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைந்திருந்த நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது ஒருவர் பிடிப்பட்டதோடு கடும் தாக்குதல்களுக்கு உள்ளான நிலையில் மேலும் ஒரு நபர் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த நபர் கடற்படை சிப்பாயி என பின்னர் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கடற்படையினரை குறித்த முத்தரிப்புத்துறை கிராம மீனவர்களுக்கு தற்போது பல்வேறு நெருக்குவாதங்களை கொடுத்து வருவதாக மீனவர்கள் மாகாண சபை உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர்.

வழமையாக கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு கடற்படையினர் தொடர்ச்சியாக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதினால் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்ல அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்தார்.

இதனால் முத்தரிப்புத்துறை கிராமம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை எனவும்,அற்கு மக்கள் மத்தியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,அங்கு அதிகலவான கடற்கடை, புலனாய்வுத்துறையினர், மற்றும் காவல் துறையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளமையினால் மக்களின் இயல்பு நிலை பாதீக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மேலும் தெரிவித்தார்.

இதே வேளை கடற்படைச் சிப்பயியை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 10 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் குடும்பத்தலைவர்களை இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடற்படை சிப்பாயி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 10 இற்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை சிலாபத்துறை பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலே குறித்த நபர்களை இன்று(21) வெள்ளிக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முத்தரிப்புத்துறை கிராம மீனவர்கள் மத்தியில் தொடர் அச்ச நிலை- வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா Reviewed by NEWMANNAR on October 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.