அனுராதபுரத்தில் தாக்குதலுக்குள்ளான ஆலயத்தை பார்வையிட்டது சிவசேனா குழு
புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள சிவசேனா குழு, தாக்குதலுக்குள்ளான அனுராதபுரம் பழைய நகரத்தில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தை நேற்று புதன்கிழமை சென்று பார்வையிட்டது.
சுவாமி சாகிரத்தர் சைதன்யர் சின்மயானந்தர், மறவன் குலவு சச்சிதானந்தம், மனித உரிமை அலுவலராக இருந்த கலாநிதி மோகன், வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், சட்ட மாணவர் யசோதரன் உள்ளிட்ட குழுவினரே தாக்குதலுக்குள்ளான ஆலயத்தைப் பார்வையிட்டதுடன், தாக்குதலுக்கு இலக்கான நபர் மற்றும் குடும்பத்தினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இவ்விஜயத்தின் போது அப்பகுதிக்குப் பொறுப்பான அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரி ஆகியோரையும் இக்குழு சந்தித்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தது.
அனுராதபுரத்தில் தாக்குதலுக்குள்ளான ஆலயத்தை பார்வையிட்டது சிவசேனா குழு
Reviewed by NEWMANNAR
on
October 21, 2016
Rating:

No comments:
Post a Comment