ஆண்டாங்குளம் பள்ளிவாசல் பிட்டியில் அமைக்கப்பட்ட பள்ளிவாசல் வைபவ ரீதியாக திறந்து வைப்பு- கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை பங்கேற்பு--Photos
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் பள்ளிவாசல்பிட்டி 'தாருல் ஹிகம் அல் அஸ்ரப்பிய்யா' அரபுக்கல்லூரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 'மஸ்ஜிதுல் குலபா உர் ராஸீதின் ஜும்மா பள்ளிவாசல்' இன்று (14) வெள்ளிக்கிழமை மதியம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஆர்.சி.அமைப்பினூடாக அமைக்கப்பட்ட குறித்த பள்ளிவாசால் மௌலவி எஸ்.எச்.எம்.ஏ.முபாரக் ரஸாதி தலைமையில் திறப்பு விழா நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த திறப்பு விழா நிகழ்வின் போது அமைச்சர் றிஸாட் பதியுதீன் கலந்து கொண்டு குறித்த பள்ளிவாசலை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இதன் போது மன்னார் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,அமைச்சரின் இணைப்புச் செயலாளர் என்.எம்.முனவ்பர்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே வேளை மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் கடந்த யுத்த காலத்தின் போது முற்றாக அழிவடைந்த நிலையில் குறித்த பள்ளிவாசலை மீண்டும் புதிதாக அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வெள்ளிக்கிழமை(14) காலை இடம் இடம் பெற்ற போது அமைச்சர் றிஸாட் பதியுதீன் அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்த குமார்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உற்பட அப்பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ்,முஸ்ஸீலிம் மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஆண்டாங்குளம் பள்ளிவாசல் பிட்டியில் அமைக்கப்பட்ட பள்ளிவாசல் வைபவ ரீதியாக திறந்து வைப்பு- கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை பங்கேற்பு--Photos
Reviewed by NEWMANNAR
on
October 14, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 14, 2016
Rating:














No comments:
Post a Comment